கூட்டுறவுப் பயிர்க் கடன்களைக் தள்ளுபடி செய்யக்கோரி சென்னையில் 20-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் பேரணி!

2 Min Read

சென்னை, ஜூலை 8- கூட் டுறவு பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி சென்னையில் விவசாயிகள் பேரணி நடத்தினர்.

தவெக தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி, கூட்டுறவு பயிர்க் கடன் களை உடனடியாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் நேற்று (7.7.2026) பேரணி நடைபெற்றது.

எழும்பூர் சித்ரா திரையரங்கம் முதல் எல்.ஜி. சாலை சந்திப்பு வரை நடைபெற்ற இந்தப் பேரணிக்கு, சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருக சாமி தலைமை தாங்கினார்.  பொதுச் செயலாளர் சண்முகசுந்தரம், மாநிலத் தலைவர் முத்து விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 20-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களைச் சேர்ந்த திரளான விவசாயிகள் இதில் கலந்துகொண்டு, அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

விவசாயிகளுக்கு ஏமாற்றம்

அப்போது செய்தி யாளர்களிடம் ஈசன் முருகசாமி கூறியதாவது:

தவெக ஆட்சிக்கு வந்தால் 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசா யிகளுக்கு முழுமையாக கடன் தள்ளுபடி செய்யப் படும் என அக்கட்சியின் தலைவர் உறுதியளித்தார். இது வெறும் வாக்குறுதி அல்ல, விவசாயிகளுக்கான உத்தரவாதம் என்றும் கூறினார். இதனை நம்பியே விவசாயிகள் வாக்களித்தனர்.

ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக உள்ளது. கடன் தள்ளு படி கிடைக்கும் என எதிர்பார்த்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

ரூ.50 ஆயிரம், ரூ.75 ஆயிரம் என விவசாயிகளை ஏலம் விட்டு வருகிறார். பயிருக்கு உரிய விலை கிடைக்காமலும், கடன் சுமையாலும் தமிழ்நாட்டில் நாள்தோறும் 2 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதாக அரசு புள்ளி விவரங்களே தெரிவிக்கின்றன.

அரசு தனது வாக்குறு திகளை நிறைவேற்றத் தவறினால், இந்த தற்கொலைகளின் எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது.

மாநிலம் தழுவிய போராட்டம்

விவசாயிகளை மிரட்டும் போக்கை அதிகாரிகள் கைவிட வேண்டும். உடனடியாக பயிர்க் கடன்களை ரத்து செய்யாவிட்டால், அடுத்த கட்டமாக மாநிலம் தழுவிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *