தன்னுடைய கலைவடிவத்தின் வாயிலாக மூடநம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவைக் கொண்டு சேர்த்தவர், கலைவாணன்! படத்திறப்பு நிகழ்வில், கனிமொழி கருணாநிதி எம்.பி புகழாரம்!

4 Min Read

சென்னை, ஜூலை 6 தன்னுடைய கலை வடிவத்தின் வாயிலாக மூடநம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவைக் கொண்டு சேர்த்தவர், கலைவாணன் என்றார் கனிமொழி கருணாநிதி எம்.பி.

நேற்று (5.7.2026) சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், பொம்மலாட்டக் கலைஞரும், திராவிட இயக்க செயற்பாட்டாளருமான மறைந்த மு.கலைவாணனின் நினைவேந்தல் நிகழ்வில், அவருடைய படத்தினைத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். இந்நிகழ்வில், தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினருமான கவிஞர் கனிமொழி நினைவேந்தல் உரையாற்றினார்.

அவரது நினைவேந்தல் உரை வருமாறு:

இரண்டு பெரிய சவால்கள்!

இந்தச் சமூகத்தில் எந்த மூடநம்பிக்கை களைத் தொடர்ந்து திணித்துக் கொண்டி ருந்தார்களோ, அதையெல்லாம் தன்னு டைய கலைவடிவத்தின் வாயிலாக மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவைக் கொண்டு சேர்த்தவர், கலைவாணன் அவர்கள். இது இரண்டு பெரிய சவால்களோடு இருக்கக்கூடிய  விஷயமாகும். ஒன்று, இந்த சமூகம் ஏற்றுக்கொள்ளாத கருத்துகளைப் பேசக்கூடிய ஒரு வழியை, தனது பாதையை அவர் தேர்ந்தெடுக்கிறார். இன்னொன்று, கொஞ்சம் கொஞ்சமாக அருகி வந்து கொண்டிருக்கக்கூடிய மண் சார்ந்த கலைவடிவங்களிலே இன்னும் அதிகமாக மக்களுக்கு இடையே இல்லாத பொம்மலாட்டக் கலையை தேர்ந்தெடுக்கிறார்.

இந்த இரண்டு விசயங்களையும் வெற்றிகரமாக கொண்டு சேர்த்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் நேரத்தில்கூட தலைவர் கலைஞர் கேட்டுக்கொண்டதற்கிணங்க பல இடங்களிலே அவருடைய இந்த பொம்மலாட்டத்தின் வழியான பிரச்சாரங்கள் நடைபெற்றிருக்கிறது.

‘எனக்குப் பெரியாருடைய கருத்துகளில் உடன்பாடு இருக்கிறது; ஆனால் சில விஷயங்களில் இல்லை’ என்று புதுவிதமாக சிலர் பேசுகிறார்கள்!

அந்த அளவிற்கு இந்த இயக்கத்தோடு தன்னை இணைத்துக்கொண்டு, தன்னுடைய கருத்துகளை மக்களிடையே எளிய வகையில் கொண்டு சேர்த்தவர். பெண் விடுதலையில் இருந்து தொடர்ந்து இந்த சமூகம் முன்வைத்துக் கொண்டிருக்கக்கூடிய பல்வேறு விசயங்களை, கேள்வி கேட்கக்கூடிய ஒரு வடிவத்தை, ஒரு வழியை அவர் தேர்ந்தெடுத்து அதில் எந்தக் காலக்கட்டத்திலும் எந்தவித சமரசமும்  இல்லாமல், எந்த இடத்திலுமே விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து பய ணித்தார். இன்றைக்கு நிறைய பேர் கேள்வி கேட்கிறார்கள், பெரியாருடைய கருத்துகளைப் பற்றியெல்லாம் சிலபேர் பேசுகிறார்கள். எனக்குப் பெரியாருடைய கருத்துகளில் உடன்பாடு இருக்கிறது, ஆனால் சில விசயங்களில் இல்லை என்று புதுவிதமாக பேசுகிறார்கள்.

ஏற்றத்தாழ்வு ஒருவரது பிறப்பின் வாயிலாக இந்த சமூகத்திலே எப்படி முன்வைக்கப்படுகிறது?

‘கடவுளை ஏன் எதிர்க்க வேண்டும்’ என்று பெரியாரே சொல்லிருக்கின்றார்.  பெரியாருக்கும், கடவுளுக்கும் வாய்க்கா வரப்பு தகராறு இல்லை. ‘கடவுளை நீங்கள் ஏன் எதிர்க்கிறீர்கள்?’ என்று கேட்டபொழுது, அவர் சொன்ன பதில், ‘‘நான் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் ஊற்றுக் கண்ணாக இருந்து, இந்த சமூகத்திலே ஏன் இந்த விச யங்கள் எல்லாம் முன்வைக்கப்படுகிறது என சிந்திக்க வைக்கிறது. ஜாதி ஏன் முன்வைக்கப்படு கிறது? ஏற்றத்தாழ்வு ஒருவரது பிறப்பின் வாயிலாக இந்த சமூகத்திலே எப்படி முன்வைக்கப்படுகிறது? ஆண்– பெண் என்ற வித்தியாசங்களை எல்லாம் இந்த சமூகம் ஏன் திரும்ப திரும்ப சொல்லுகிறது? என்ற கேள்விகளுக்கெல்லாம் பதிலாக அமைந்தது மதமும், கடவுளும்தான்’’ என்றார்.

அதை உடைத்தவர், கேள்வி கேட்டவர், தகர்த்தவர் தந்தை பெரியார். அதனால், இந்த சமூகத்திலே மாறுதல்களை கொண்டுவர வேண்டும், சுயமரியாதை கருத்துகளைக் கொண்டுவர வேண்டும், இந்த சமூகத்திலே எல்லாரும் சமம் என்று உண்மையிலேயே நம்பக்கூடியவர்கள் எதையும் கேள்வி கேட்கத் தயங்காதவர்கள் மட்டும்தான் இந்த சமூகத்திலே உண்மையான மாற்றத்தைக் கொண்டுவர முடியும். அப்படிப்பட்ட மாற்றத்திற்காக உழைத்தவர்தான் கலைவாணன். அவருடைய நினைவுகளை நாம் இந்த மேடையிலே போற்றிக் கொண்டிருக்கிறோம்.

அவரோடு இணைந்து சென்னை சங்க மத்திலேயும் பல சந்தர்ப்பங்களிலும், பல இடங்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தக்கூடிய வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. பொதுவாக  இந்த மாதிரி கலை நிகழ்ச்சிகளுக்கு, அதுவும் சிந்திக்கக்கூடிய கருத்துகளைச் சொல்லக்கூடிய நிகழ்ச்சி களுக்கு வெகு சுலபமாக மக்கள் வராத கால கட்டத்தில் கூட அவருடைய கருத்துகளை கேட்பதற்காக பல்வேறு மக்கள் தேடி வருவார்கள். குறிப்பாக சென்னை சங்கமத்தில் நாங்கள் நடத்தக்கூடிய அந்த நிகழ்வுகளை கேட்பதற்காக எந்த அளவிற்கு ஆர்வத்தோடு மக்கள் வந்தார்கள் என்பதை நாங்கள் பல நேரங்களிலே பார்த்திருக்கிறோம்.

அவரது முற்போக்கு கருத்துகளை, கலையை நாம் தொடர்ந்து அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்ல வேண்டும்!

அப்படிப்பட்ட ஒரு கலைஞரைப்  போற்றக்கூடிய வகையில் அவருடைய மறைவிற்குப் பிறகு அவருடைய மகன் பகலவனிடம் நான் பேசிய நேரத்தில்,  ‘‘என்னுடைய தந்தை இல்லை. ஆனால், அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கக்கூடிய அவருடைய கருத்துகள், சிந்தனைகள், கலை இவற்றை நாங்கள் முன்னெடுத்துச் செல்வோம்’’ என்று சொல்லக்கூடிய பிள்ளை களைப் பெற்றிருக்கக்கூடிய அவருடைய நினைவுகளைப் போற்றுவோம். அவரது முற்போக்கு கருத்துகளை, கலையை நாம் தொடர்ந்து அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்ல வேண்டும். இந்த கலைப்பயணத்தில் அவர்களுக்கு எங்களால் முடிந்த அளவிற்கு எப்பொழுதும் உறுதுணையாக நிற்போம்.

– இவ்வாறு தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினருமான கவிஞர் கனிமொழி உரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *