டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* அயோத்தி ராமன் கோவில் பக்தர்கள் காணிக்கை பல கோடி ரூபாயை கையாடல் செய்ததாக கைது செய்யப்பட்ட நபர்கள் யார்? ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள், கார் மெக்கானிக் மற்றும் டிரஸ்ட் நிர்வாகிகளுடன் தொடர்பு உள்ளவர்கள் என கண்டுபிடிப்பு.
* தேர்தல் ஆணையத்தின் எஸ்.அய்.ஆர். திட்டம், மன்னர் காலத்தில் யார் வாக்களிக்க வேண்டும் என்ற நடைமுறைக்கு நம்மை இட்டுச் சென்றுள்ளது என மேனாள் நீதிபதி சுதர்சன் காட்டம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிரான கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம் 16ஆவது நாளாகத் தொடர்கிறது; உண்ணாநிலைப் போராட்டத்தின் எட்டாவது நாளில் வாங்சுக் 6 கிலோ எடையை இழந்தார், தொடர்ச்சியான தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவுகள் மாணவர்களையும் அவர்களது குடும்பத்தினரின் வாழ்க்கையையும் கடுமையாகப் பாதித்துள்ளதாக குற்றம் சாட்டி, பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை அக்கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
தி இந்து:
* மோடி அரசு ‘ஆபத்தான’, ‘தீய நோக்கம் கொண்ட’ மசோதாக்களை கொண்டு வர முயற்சிக்கிறது: ஜெய்ராம் ரமேஷ். தொகுதி மறுவரையறை மசோதாவையோ (DELIMITATION BILL) அல்லது பிரதமர், முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் தொடர்ந்து 30 நாட்கள் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டால் அவர்களை தானாகவே பதவியிலிருந்து நீக்குவதற்கான ‘அரசியலமைப்பு (130ஆவது திருத்த) மசோதா, 2025’-ஒன்றிய அரசு மீண்டும் கொண்டுவந்தால், ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளால் அவற்றை மீண்டும் முறியடிக்க முடியும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் (தகவல் தொடர்பு) ஜெய்ராம் ரமேஷ் பேட்டி.
* அரசியலமைப்பைப் புறக்கணித்து நிறுவனங் களைக் கைப்பற்ற பாஜக முயற்சிக்கிறது: லாலு பிரசாத் குற்றச்சாட்டு. சமரசம் செய்து கொள்ளப்பட்ட அரசியலமைப்பு நிறுவனங் கள், ஆவேசமான சந்தை சக்திகள், வாக் காளர்களையும் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதி களையும் விலைக்கு வாங்க மூலதனத்தை வரம்பின்றி பயன்படுத்துதல் மற்றும் வலதுசாரி பிற்போக்கு அரசியல் ஆகியவை ஜனநாயகத்திற்கு சவாலாக விளங்குவதாக அவர் குற்றம் சாட்டினார்.
தி டெலிகிராப்:
* அயோத்தி ராமன் கோயில் விவகாரத்தில் பாஜக மீது எதிர்க்கட்சிகள் கடும் தாக்குதல்; “ராமன் கோயிலுக்காக வழங்கப்பட்ட தங்கம், வெள்ளி மற்றும் செங்கற்கள் கூட கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. தினமும் அவர்கள் இறைவனின் பெயரை உச்சரிக்கிறார் கள், ஆனால் அதே இறைவனின் பெயரால் கொள்ளையிலும் ஈடுபடுகிறார்கள்,” என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்.
* ஆளும் கட்சியின் ‘ஹிந்துத்துவ’ நிலைப்பாட்டை விமர்சித்து தாக்கி பேசிய தாக்கரே, “அயோத்தி என்பது ஒரு முன்னோட்டம் (டிரெய்லர்) மட்டுமே என்றும், காசியும் மதுராவும் இனிமேல்தான் வரவிருக்கின்றன என்றும் அவர்கள் கூறுகிறார்கள்; அங்கு நடக்க இருக்கும் கொள்ளை குறித்து நான் கவலைப்படுகிறேன்,” என்று கூறினார்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ‘முஸ்லிம்கள் மற்றும் சிறுபான்மையினரின் பாதுகாப்புக் கோட்டையாக திகழும் திமுக’: “எங்கள் இடையே பிளவை ஏற்படுத்த யார் முயன்றாலும் அல்லது என்னென்ன அவதூறுகள் பரப்பப்பட்டாலும், சிறுபான்மையினருக்கும் இஸ்லாமிய மக்களுக்கும் திமுக எப்போதும் ஒரு பாதுகாப்புக் கோட்டையாகவே திகழும்,” என று உதயநிதி ஸ்டாலின் பேச்சு.
– குடந்தை கருணா
