நிலக்கரிக் களத்தில் கழகத்தின் போர்க்குரல்!

2 Min Read

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு ராயல்டி வரவேண்டும் என்பதில் தொடங்கி, அங்கு சமூகநீதி பாதுகாக்கப்படவும், பொதுத்துறையாக நீடிக்கவும் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் இயக்கம் திராவிடர் கழகம்! இதோ ஒரு செய்தி:

“நெய்வேலி நிலக்கரி நிறுவனம் மற்றும் பொதுத்துறை நிறுவனப் பங்குகளை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் போக்கை எதிர்த்தும், கண்டித்தும் திராவிடர் கழகத்தின் சார்பில், நெய்வேலி நகரம் பெரியார் சதுக்கத்தில் 30.6.2010 புதன் காலை 10.30 மணியளவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அன்றைய திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் சு. அறிவுக்கரசு தலைமை வகித்தார். கழகத் துணைப் பொதுச்செயலாளர் துரை, சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக, இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி மற்றும் தொழிலாளரணி மாவட்ட, ஒன்றிய, நகர நிருவாகிகள் கண்டன உரையாற்றினர்.

கழகப் பொதுச்செயலாளர் சு.அறிவுக்கரசு ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்து “1930 இல் ஆய்வுப் பணி தொடங்கி 1957 இல் தியாகச்சுடர் காமராஜர் முயற்சியால் இந்திய அரசால் தொடங்கப்பட்ட என்.எல்.சி. நிறுவனம், பொதுத் துறையில் மக்களுக்குச் சொந்தமான நிறுவனமாக இயங்கி வருகிறது. இந்திய அரசின் “மினி ரத்னா” தகுதி பெற்ற இந்த நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. கமுக்கமாக நடைபெற்றுவரும் இம்முயற்சியை கண்டித்துதான் இந்த ஆர்ப்பாட்டம்“ என்று முழங்கினார்.

ஆர்ப்பாட்டத்திற்கு முன்னிலை வகித்து கழகத் துணைப் பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரன் “பொன் முட்டையிடும் வாத்து போன்று, மய்ய அரசுக்கு இலாபம் ஈட்டித்தரும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பது மாபெரும் கேடான காரியம். உலக மயம், தனியார் மயம், தாராள மயம் எனும் ஏகாதிபத்திய போக்கிற்கு இந்திய அரசு இரையாகிப் போன காரணத்தின் விளைவுதான் இது.“

“தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் ஆணையை ஏற்று எந்த விலையையும் கொடுக்க கழகத் தோழர்கள் தயாராய் இருக்கிறார்கள் என்பதன் தொடக்கம்தான் இந்த ஆர்ப்பாட்டம்“ எனப் பேசினார்.

மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் கருத்துரை வழங்கினர். தோழர்கள் ஆர்ப்பாட்ட முழக்கமிட்டனர். 50 பெண்கள் உள்பட 500 தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.“

இதற்கு முன் பலமுறை என்.எல்.சியின் பங்குகளை விற்க ஒன்றிய அரசு முனைந்தபோதெல்லாம் எதிர்த்து நின்று போராடிய கழகமும் – கழகத் தலைவரும் மீண்டும் என்.எல்.சி.யைத் தனியார் மயமாக்கும் முயற்சியை தோற்கடிக்க 77.2026 அன்று களம் காண உள்ளாகள்.

தமிழ்நாட்டின் உரிமைக் காக்க தமிழர்களே அணி திரள்வீர்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *