கோயில்களில் கொள்ளையோ கொள்ளை பத்ரிநாத் கோயிலிலும் காணிக்கை திருட்டு!

டேராடூன், ஜூலை 5 அயோத்தி ராமன் கோயில் நன்கொடை முறைகேடு சர்ச்சை நாடு முழுவதும் பெரும் அதிர் வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோயிலிலும் காணிக்கை திருட்டுப் புகார் எழுந்துள்ளது பெரும்

அயோத்தி ராமன் கோயிலுக்கு வழங்கப்பட்ட நன்கொடைகளில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, கோயில் அறக்கட்டளையின் கணக்குகளை சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்அய்டி) மீண்டும் தணிக்கை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் கமிட்டிக்கு (BKTC) சொந்தமான பத்ரிநாத் தாமில் காணிக்கையாகப் பெறப்பட்ட தொகையில் நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாக ‘பைரவ் சேனா’ என்ற அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பான புகார்கள் சமூக வலைதளங்களிலும் வேகமாகப் பரவி வருகின்றன.

விசாரணைக் குழு அமைப்பு

இத்தகைய தீவிரமான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோயில் கமிட்டி இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்த விசாரணைக் குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் கமிட்டி யின் தலைவர் ஹேமந்த் திவேதி செய்தியாளர்களிடம் பேசுகையில்:”சமூக வலைதளங் களில் பரவி வரும் புகார்களை கோயில் கமிட்டி மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நபர் எனது தனிப்பட்ட செயலாளர் அல்ல; அவர் பிகேடிசி அமைப்பின் சாதாரண அரசு ஊழியர் மட்டுமே. விசாரணையில் இந்த முறைகேடு குற்றச்சாட்டுகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

மேலும், அந்த ஊழியர் இதற்கு முன்பு கோயில் குழுவின் மூன்று முன்னாள் தலைவர்களிடம் தனிப்பட்ட உதவியாளராகப் பணியாற்றியுள்ளார் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

இவ்விவகாரம் குறித்து கோயில் கமிட்டியின் முதன்மை செயல் அதிகாரி சோஹன் சிங் ரங்கட் கூறுகையில்:

“சமூக ஊடகப் புகார்களைத் தொடர்ந்து பத்ரிநாத் கோயில் வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. கிடைக்கப்பெற்ற காட்சிகளில் போதிய தெளிவு இல்லை. இருப்பினும், பிரச்சினையின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, முழு விவகாரமும் கோயில் குழுத்தலைவரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப் பட்டுள்ளது” என்றார்.

சட்ட நடவடிக்கை

விசாரணைக் குழுவானது அங்கிருக்கும் ஆதாரங்கள், சிசிடிவி காட்சிகள் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் தனது விரிவான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கும். விசாரணையில் ஏதேனும் முறைகேடுகள் கண் டறியப்பட்டால், பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் கமிட்டி சட்டம் 1939 மற்றும் அரசு ஊழியர் நடத்தை விதிகளின் கீழ் தவறு செய்தவர்கள் மீது சட்டப்பூர்வ மற்றும் துறை ரீதியான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் முதன்மை செயல் அதிகாரி கூறினார்.மேலும், இந்த விசாரணை முழுமையாக முடிவடையும் வரை, பொதுமக்கள் யாரும் ஆதாரமற்ற அல்லது தவறான குற்றச்சாட்டுகளை சமூக வலைதளங்களில் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *