பெங்களூருவில் 7-ஆவது உலக திருக்குறள் மாநாடு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு

3 Min Read

பெங்களூரு, ஜூலை 5 பெங் களூருவில் உள்ள செயின்ட் ஜோசப் பல்கலைக்கழகத்தில் இன்று 7-ஆவது உலக திருக்குறள் மாநாடு நடைபெற உள்ளது. இதில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறீதரன், சிறீநாத் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

இதுகுறித்து, திருவள்ளுவர் சங்கத் தலைவர் எஸ்.டி.குமார் பெங்களூருவில் நேற்று (4.7.2026) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: செயின்ட் ஜோசப் பல்கலைக்கழகம், தாய்மொழி கூட்டமைப்பு மற்றும் திருவள்ளுவர் சங்கம் இணைந்து இன்று (ஜூலை 5) 7-ஆவது உலக திருக்குறள் மாநாட்டை நடத்துகின்றன. செயின்ட் ஜோசப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இந்த மாநாட்டை தமிழ்நாடு அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசு தொடங்கி வைக்கிறார். காலை 10 மணிக்கு தொடங்கி 3 அரங்கங்களில் மாலை 6 மணி வரை மாநாடு நடைபெறுகிறது.

இம்மாநாட்டில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறீதரன், சிறீநாத், இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, கன்னட ரக்சன வேதிகே அமைப்பின் தலைவர் நாராயண கவுடா, செயின்ட் ஜோசப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் விக்டர் லோபோ உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். மாநாட்டின் தொகுப்பு நூலாக, `திருக்குறள் உணர்த்தும் உலக அமைதியும் மாந்தநேய மாண்புகளும்’ என்ற தலைப்பிலான நூலை மயில்சாமி அண்ணாதுரை வெளியிடுகிறார்.

இதையடுத்து 20-க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் திருக்குறள் தொடர்பான தங்களின் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிக் கின்றனர். கன்னடம், துளு, கொங்கனி உள்ளிட்ட மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன.

மொழிபெயர்ப்பு பணிகளை மேற்கொண்ட எழுத்தாளர்கள் பாராட்டி கவுரவிக்கப்படஉள்ளனர். இம்மாநாட்டில் கருநாடகா, தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளிமாநில, வெளிநாடுகளில் இருந்து தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் நூற்றுக்கணக்கில் பங்கேற்கின்றனர்.

உதவி செவிலியர் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

 சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

சென்னை, ஜூலை 5 சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவ மனையில் 2026-2027 ஆண்டிற்கான மருத்துவ இணையியல் படிப்பான இரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சிக்கான (NM COURSE) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பயிற்சியில், சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் பணியாளர்களின் வாரிசுகளுக்கும், மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் பயின்ற மாணவிகளும் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தகுதியுள்ள மாணவிகள் இயக்குநர், தொற்று நோய் மருத்துவமனை, எண்.187, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை, சென்னை-600 081 என்ற முகவரியில் நாளை (6ஆம் தேதி) முதல், வரும் 20ஆம் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அனைத்து வேலை நாட்களிலும் ரூ.50 பணமாக செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 24ஆம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆளுநர் இணை அரசை நடத்த முயற்சி : வன்னி அரசு

மக்கள் பிரச்சினைகளுக்கு ஆளுநர் மாளிகையை தொடர்பு கொள்ளலாம் என ஆர்.வி. அர்லேகர் பேசியதற்கு வன்னி அரசு கண்டனம் தெரிவித்துள்ளார். அவரின் பேச்சு இணை அரசை நடத்த முயற்சிக்கும் செயல் எனவும் சாடியுள்ளார். மக்கள் தேர்ந்தெடுத்த அரசுக்கு எதிராக செயல்படுவது அம்பேத்கர் வகுத்த அரசமைப்புச் சட்டத்துக்கு முரணானது எனவும் அவர் கூறியுள்ளார்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *