இரங்கல் தீர்மானம்

முன்மொழிதல்: தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.சிந்தனைச்செல்வன்

தீர்மானம் எண் 1 :

கீழ்க்கண்ட பெருமக்களின் மறை விற்கு இப் பொதுக் குழு தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தியாகச் செம்மலு மான தகைசால் தமிழர் ஆர்.நல்ல கண்ணு (வயது 101, மறைவு 25.2.2026),

“புரட்சிக் கலை வேந்தர்” இயக்குநர் பாரதிராஜா (வயது 84, மறைவு 10.6.2026),

திரைப்பட இயக்குநர், நடிகர், பத்திரிகையாளர் கே.பாக்யராஜ் (வயது 73, மறைவு 27.6.2026)

இனமானப் பேராசிரியர் க.அன்பழ கன் அவர்களின் உடன்பிறப்பு பேராசி ரியர் க.திருமாறன் (வயது 102, மறைவு 6.6.2026),

மலேசிய திராவிடர் கழக மேனாள் துணைத் தலைவர் கெ.வாசு (வயது 82, மறைவு 14.3.2026),

செட்டிநாடு கல்விச்செம்மல் டாக்டர் மீனா முத்தையா (வயது 91, மறைவு 2.5.2026),

தி.மு.க. மேனாள் சட்டமன்ற உறுப்பி னரும், மொழிப் போர் வீரருமான உரத்தநாடு எல்.கணேசன் (வயது 92, மறைவு 4.1.2026),

திருமழப்பாடி தமிழ்ச் சங்கத் தலை வர், தமிழ்ப் பேராசிரியர் சீரிய பகுத்தறிவாளர், முனைவர் அ.ஆறுமுக னார் (வயது 93, மறைவு 31.12.2025),

இன உணர்வுப் பாடகர் தேனிசை செல்லப்பா (வயது 85, மறைவு 22.4.2026),

சிங்கப்பூர் இலக்கியச் செம்மல் ஜே.எம்.சாலி என்ற ஜமாலுதின் முகமது சாலி (வயது 87, மறைவு 15.5.2026),

தந்தை பெரியார் பற்றாளரும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தருமான பேரா சிரியர் முனைவர் சுந்தரமூர்த்தி (வயது 87, மறைவு 1.12.2025),

சிங்கப்பூர் இலக்கியத் தேனீ மா.அன்பழகன் (வயது 83, மறைவு 27.4.2026),

பெரியார் பேருரையாளர் புலவர் மா.நன்னன் அவர்களின் வாழ்விணையர் பார்வதி அம்மையார் (வயது 96, மறைவு 4.6.2026), ஆகிய பெருமக்களின் மறைவிற்கு இப்பொதுக்குழு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. இப் பெருமக்களின் மறைவால் துயரத்திற்கு ஆளான குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும், அன்பர்களுக்கும் ஆறுதலைத் தெரி வித்துக் கொள்கிறது.

பெரியார் பெருந்தொண்டர் ஆத்தூர் தங்கவேல் (வயது 104, மறைவு 10.12.2025), திரவிடர் கழக வழக்குரைஞரணி மாநிலச் செயலாளர் செயல்வீரர் மதுரை வழக்குரைஞர் மு.சித்தார்த்தன் (வயது 54, மறைவு 10.1.2026), பொம்மலாட்டக் கலைஞர் கலைமாமணி மு.கலைவாணன் (வயது 67, மறைவு 22.5.2026), மண்ணச்சநல்லூர் கழக வீராங்கனை மூதாட்டி பி.என்.ஆர்.அரங்கநாயகி அம்மாள் (வயது 83, மறைவு 24.4.2026), சென்னை மாவட்ட திராவிடர் கழக மகளிர் அணி முன்னோடி வீராங்கனை வில்லிவாக்கம் தங்கமணி குணசீலன் (வயது 85, மறைவு 3.5.2026), திருவண்ணாமலை – ஆடையூர் சுயமரியாதைச் சுடரொளிகள் சிதம்பரம்-ரெங்கம்மாள் ஆகியோரின் மகள் சூரியகுமாரி சம்பந்தம் (வயது 80, மறைவு 25.12.2025),

பெரியார் பெருந்தொண்டர் நெடு வாக்கோட்டை கோ.தம்பிக்கண்ணு (வயது 85, மறைவு 27.2.2026), வேளாங்கன்னி வி.எஸ்.டி.ஏ.பிர ணம்மாள் .பெரியார் பெருந்தொண்டர் திருக்குவளை ரெ.ரெங்கநாதன் (வயது 82, மறைவு 7.3.2026), அரியலூர் மாவட்ட கழக மகளிரணித் தலைவர் ஜோதிமணி (மறைவு 21.3.2026), ஆண்டிமடம் ஒன்றியம் தேவனூர் கல்வெட்டு கிராமம் பெரியார் பெருந்தொண்டர் சி.அரங்கநாதன் (வயது 83, மறைவு 13.3.2026), மணப்பாறை நகர திராவிடர் கழகத் தலைவர் ச.இரும்பொறை என்ற பிச்சை (மறைவு 3.4.2026), காரைக்குடி மாவட்ட மேனாள் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ச.கைவல்யம் (வயது 84, மறைவு 26.4.2026), சின்ன கடவாடி கா.அறிவழகன் (வயது 30, மறைவு 27.4.2026), பெருமாத்தூர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சு.பழனியாண்டி (வயது 93, மறைவு 7.5.2026), சோமரசன்பேட்டை கழகத் தலைவர் பி.தியாகராசன் (வயது 83, மறைவு 6.5.2026), மேட்டூர் மாவட்ட கழகத் தலைவர் க.கிருஷ்ணமூர்த்தி (வயது 73, மறைவு 31.10.2026) தமிழசிரியர் கே.மோரூர் சூ.மாணிக்கம் (வயது 77, மறைவு 7.5.2026), செம்பனார்கோவில் ஒன்றிய கழக செயலாளர் எஸ்.பி.கே.கவுதமன் (வயது 79, மறைவு 18.5.2026), எடப்பாடி, கவுண்டம்பட்டி காட்டு வளவு பெரியார் பெருந்தொண்டர் எஸ்.பி.மெய்வேல் (வயது 90, மறைவு 20.5.2026), திருப்பனந்தாள் ஒன்றிய கழகத் தலைவர் சி.தமிழ்மணி (வயது 54, மறைவு 31.5.2026),

திருச்சி மாநகர திராவிடர் கழக மேனாள் தலைவர் சி.மருதை (வயது 83, மறைவு 23.12.2025), கல்லக்குறிச்சி நல்லாசிரியர் நல்.இராமலிங்கம் (மறைவு 21.12.2025), ஆண்டிமடம் ஒன்றிய கழகத் தலைவர் இரா.தமிழரசன் (வயது 58, மறைவு 21.12.2025), திருவிடைமருதூர் ஒன்றிய கழக செயலாளர் கு.முருகேசன் (வயது 66, மறைவு 25.12.2025), திருவாரூர் ஜெ.இன்பராஜா (மறைவு 10.1.2026), ‘விடுதலை’ப் பணிமனை மேனாள் தோழர் குடவாசல் இரவிச்சந்திரன் (வயது 56, மறைவு 22.2.2026), கொள்ளிடம் ஒன்றிய கழகத் தலைவர் பி.பாண்டியன் (மறைவு 16.2.2026), பெரியார் பெருந்தொண்டர் அம்மன்பேட்டை எம்.எஸ்.கலியபெருமாள் (வயது 95, மறைவு 18.2.2026), பெரியார் பெருந்தொண்டர் உளுந்தூர்பேட்டை ஓவிய ஆசிரியர் அரங்க.செல்லமுத்து (வயது 96, மறைவு 26.2.2026), திருப்பூர் மாவட்ட மேனாள் கழகத் துணைச் செயலாளர் ஜீவானந்தம் (வயது 63, மறைவு 31.5.2026), மதுரை மாவட்ட மேனாள் கழக செயலாளர் ம.நடராசன் (வயது 78),

கீழவாளாடி சட்ட எரிப்புப் போராட்ட வீரர் மைக்கேல் (வயது 83, மறைவு 26.6.2026), தஞ்சை மாநகர கழகத் தோழர் ஓட்டுநர் எஸ்.செந்தில் (மறைவு 26.6.2026)

ஆகியோரின் மறைவிற்கு இப்பொதுக்குழு தனது ஆழ்ந்த இரங்க லைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் அளப்பரிய இயக்கத் தொண்டுக்கு வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. இவர்களின் பிரிவால் பெருந் துயரத்திற்கு ஆளாகியிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், கழகத்தினருக்கும் இப்பொதுக்குழு ஆறுதலைத் தெரி வித்துக் கொள்கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *