தொழிலாளர் தலைவர் மதிப்புமிகு தோழர் இரா. குசேலருக்கு கழகத் தலைவர் பிறந்த நாள் வாழ்த்து

1 Min Read

தொழிலாளர் தலைவர்

மதிப்புமிகு தோழர் இரா. குசேலருக்கு

கழகத் தலைவர் பிறந்த நாள் வாழ்த்து

தமிழ்நாட்டின் தனிச்சிறந்த – தொழிலாளர் தலைவரும்,  தொழிற்சங்கத் தலைவருமான தோழமைமிகு இரா. குசேலர் அவர்களுக்கு இன்று (4.7.2026)   91ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.

அதைத் ‘தொழிற்சங்க ஜனநாயக நாள் விழா’வாக நடத்துவது மிகவும் சாலப் பொருத்தமானதாகும்.

தோழர் இரா. குசேலர் அவர்கள் சிறந்த மாமனிதர்.  கொள்கைப் பார்வையோடு தனது பொது வாழ்வினை நடத்திடும் நனிச் சிறந்த பண்பாளர்– மனிதநேயர்.

தந்தை பெரியார் அவர்களிடமும், அவரது தொண்டர்களான நம் போன்றவர்களிடத்திலும் மிகவும்  நேசித்துப் பழகும் பான்மையர் – தொடர் ‘விடுதலை’ வாசக நேயர்.

‘காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான்

அவன்  காணத் தகுந்தது

வறுமையா?

பூணத் தகுந்தது பொறுமையா?’’

என்று கேட்ட புரட்சிக் கவிஞரின் கேள்விக்கு விடை கண்ட மகத்தான மார்க்சிய அறிஞர்.

நல்ல உடல் நலத்துடன் மேலும் வாழ்ந்து, அவரது நூறாம் ஆண்டில் நாமும் வாழ்த்துவோம் என்ற ‘பேராசையுடன்’ வாழ்த்துகிறோம்.

 

கி.வீரமணி

தலைவர்

        திராவிடர் கழகம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *