தொழிலாளர் தலைவர்
மதிப்புமிகு தோழர் இரா. குசேலருக்கு
கழகத் தலைவர் பிறந்த நாள் வாழ்த்து
தமிழ்நாட்டின் தனிச்சிறந்த – தொழிலாளர் தலைவரும், தொழிற்சங்கத் தலைவருமான தோழமைமிகு இரா. குசேலர் அவர்களுக்கு இன்று (4.7.2026) 91ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.
அதைத் ‘தொழிற்சங்க ஜனநாயக நாள் விழா’வாக நடத்துவது மிகவும் சாலப் பொருத்தமானதாகும்.
தோழர் இரா. குசேலர் அவர்கள் சிறந்த மாமனிதர். கொள்கைப் பார்வையோடு தனது பொது வாழ்வினை நடத்திடும் நனிச் சிறந்த பண்பாளர்– மனிதநேயர்.
தந்தை பெரியார் அவர்களிடமும், அவரது தொண்டர்களான நம் போன்றவர்களிடத்திலும் மிகவும் நேசித்துப் பழகும் பான்மையர் – தொடர் ‘விடுதலை’ வாசக நேயர்.
‘காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான்
அவன் காணத் தகுந்தது
வறுமையா?
பூணத் தகுந்தது பொறுமையா?’’
என்று கேட்ட புரட்சிக் கவிஞரின் கேள்விக்கு விடை கண்ட மகத்தான மார்க்சிய அறிஞர்.
நல்ல உடல் நலத்துடன் மேலும் வாழ்ந்து, அவரது நூறாம் ஆண்டில் நாமும் வாழ்த்துவோம் என்ற ‘பேராசையுடன்’ வாழ்த்துகிறோம்.
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
