வெனிசுலா பூகம்பத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,295 ஆக உயர்வு இடிபாடுகளில் சிக்கியிருந்த பாதுகாவலர் எட்டு நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு!

1 Min Read

கராகஸ் ஜூலை 4- வெனிசுலா வில் நடந்த சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்க இடிபாடுகளுக்குள் 8 நாட்கள் சிக்கித் தவித்த பாதுகாப்பு காவலர் ஒருவர் வியக்கத்தக்க வகையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

வெனிசுலாவில் கடந்த ஜூன் 24ஆம் தேதி 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவில் நடந்த சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்களால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில், கடியா லா மார் பகுதியில் இடிந்து விழுந்த 7 அடுக்கு மாடி கட்டட இடிபாடுகளுக்குள் 8 நாட்கள் உயிருடன் போராடிய ஹெர்னான் கில் (43) என்ற பாதுகாப்பு காவலர் வியக்கத் தக்க வகையில் உயிருடன் மீட்கப் பட்டுள்ளார்.

இதுகுறித்து அவரது மனைவி குஸ்பிமார் கோன்சலஸ் கூறுகையில், ‘இது உண்மையிலேயே ஒரு பெரிய அதிசயம்’ என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இந்த பேரிடரில் இதுவரை 2,295 பேர் உயிரிழந்துள்ளதும், 11,267 பேர் காயமடைந்துள்ளதும், சுமார் 50,000 பேர் காணாமல் போயுள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சுமார் 60,000 கட்டடங்கள் சேதமடைந்து 13,000 பேர் வீடற்றவர்களாக தவித்து வருகின்றனர். பன்னாட்டு நாடுகளின் உதவியுடன் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *