கொலை மிரட்டல் எதிரொலி ஈரானில் கமேனியின் இறுதிச்சடங்கில் மகன் மொஜ்தபா பங்கேற்கமாட்டார்

1 Min Read

தெஹ்ரான், ஜூலை 4– இஸ்ரேலின் கொலை அச்சுறுத்தல் மற்றும் உளவு பார்க்கும் அபாயம் காரணமாக, தனது தந்தை அலி கமேனியின் இறுதிச்சடங்கில் ஈரானின் புதிய உச்சத்தலைவர் மொஜ்தபா கமேனி பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே ஈரானுக்கு எதிரான போர் தொடங்கிய கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி நடந்த வான்வழித் தாக்குதலில், ஈரானின் உச்சத்தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டார். அவரது இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் ஈரான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் நடத்துவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

இன்று தொடங்கி கமேனியின் இறுதிச்சடங்குகள் பல நாட்களுக்கு நடைபெறும். அவரது உடல் ஈரான் மற்றும் அண்டை நாடான ஈராக்கில் உள்ள பல்வேறு நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டும். தெஹ்ரானில் உள்ள கிராண்ட் மொசல்லா பகுதியில் இறுதிச்சடங்குகள் தொடங்கும்.

இதற்கிடையே, ஈரானின் புதிய உச்சத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அவரது மகன் மொஜ்தபா கமேனி தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகின்றார். அவருக்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கொலை மிரட்டல் விடுத்துள்ள நிலையில், அவர் தந்தை அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கில் பங்கேற்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *