மும்பை, ஜூன் 3 மகாராட்டிர அரசியலில் அரங்கேறி வரும் கட்சித் தாவல்கள் மற்றும் குதிரை பேரம் (அரசியல் வியாபாரம்) குறித்து மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி ஜாம்தார் கடுமையான விமர்சனங் களை முன்வைத்துள்ளார். இது தற்போது அரசியல் வட்டாரத் தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
வழக்கு ஒன்றின் விசாரணையின் போது, மாநிலத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து நீதிபதி ஜாம்தார் வெளிப்படையாகக் குறிப்பிட்டதாவது:
“மகாராட்டிர மாநிலம் முழுவதும் குதிரை பேரம் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது. எதிரணித் தலைவர்கள் பலர் தங்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதால், ஆளுங்கட்சிப் பக்கம் மாற யோசித்து வருகின்றனர். ஏனெனில், அந்தப் பக்கத்தில் அரசியல் கறைகளைக் கழுவக்கூடிய ‘சலவை இயந்திரம்’ (Washing Machine) ஒன்று உள்ளது.”
தங்களுக்கு எதிராக இருக்கும் வழக்குகளில் இருந்தும், சட்ட நடவடிக்கைகளில் இருந்தும் தப்பிப்பதற்காகவே அரசியல் தலைவர்கள் ஆளுங்கட்சிக்குத் தாவுகிறார்கள் என்ற பொது மக்களின் நீண்ட நாள் விவா தத்தை உறுதிப்படுத்தும் வகை யில் நீதிமன்றத்தின் இந்த வெளிப் படையான கருத்து அமைந்துள்ளது. நீதிபதியின் இந்த “அரசியல் சலவை இயந்திரம்” என்ற சாடல், தற்போதைய அரசியல் சூழலில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
