“கறைகளைக் கழுவ ஆளுங்கட்சியிடம் சலவை இயந்திரம் உள்ளது” மகாராட்டிர குதிரை பேரம் குறித்து மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து!

மும்பை, ஜூன் 3 மகாராட்டிர அரசியலில் அரங்கேறி வரும் கட்சித் தாவல்கள் மற்றும் குதிரை பேரம் (அரசியல் வியாபாரம்) குறித்து மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி ஜாம்தார் கடுமையான  விமர்சனங் களை முன்வைத்துள்ளார். இது தற்போது அரசியல் வட்டாரத் தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

வழக்கு ஒன்றின் விசாரணையின் போது, மாநிலத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து நீதிபதி ஜாம்தார் வெளிப்படையாகக் குறிப்பிட்டதாவது:

“மகாராட்டிர மாநிலம் முழுவதும் குதிரை பேரம் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது. எதிரணித் தலைவர்கள் பலர் தங்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதால், ஆளுங்கட்சிப் பக்கம் மாற யோசித்து வருகின்றனர். ஏனெனில், அந்தப் பக்கத்தில் அரசியல் கறைகளைக் கழுவக்கூடிய ‘சலவை இயந்திரம்’ (Washing Machine) ஒன்று உள்ளது.”

தங்களுக்கு எதிராக இருக்கும் வழக்குகளில் இருந்தும், சட்ட நடவடிக்கைகளில் இருந்தும் தப்பிப்பதற்காகவே அரசியல் தலைவர்கள் ஆளுங்கட்சிக்குத் தாவுகிறார்கள் என்ற பொது மக்களின் நீண்ட நாள் விவா தத்தை உறுதிப்படுத்தும் வகை யில் நீதிமன்றத்தின் இந்த வெளிப் படையான கருத்து அமைந்துள்ளது. நீதிபதியின் இந்த “அரசியல் சலவை இயந்திரம்” என்ற சாடல், தற்போதைய அரசியல் சூழலில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *