மும்பை, ஜூலை 3 “இந்தியாவில் உள்ள அனைத்துக் குடிமக்களும் இந்திய அரசாங்கத்தின் அடிமைகளாக மாற்றப்பட்டு வருகிறார்கள்” என்று மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி மாதவ் ஜாம்தார் மிகவும் காட்டமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
பாஜக அரசு மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு எதிராக முழக்கமிட்ட நபர் ஒருவருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட ஊர்விலக்கு உத்தரவு தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் அதிரடி கருத்துகளைக் முன்வைத்துள்ளது.
நீதிமன்றத்தின் முக்கியக் கேள்விகள் மற்றும் கருத்துகள்
“அனைத்துக் குடிமக்களும் இந்திய அரசாங்கத்தின் அடிமை களாக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களால் தங்களின் போராட் டங்களை நடத்த முடிவதில்லை, தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்த முடிவதில்லை. இதெல்லாம் என்ன நியாயம்?” என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
கேள்வித்தாள்
கசிவும், வழக்குகளும்
கசிவும், வழக்குகளும்
“இப்போது எத்தனையோ தேர்வுத் தாள்கள் கசிந்துள்ளன. அதற்கு எதிராக மக்கள் போராடினால், அவர்கள் மீது நீங்கள் வழக்குகளை போடுவீர்களா? இது என்ன நடைமுறை? போராடுவது என்பது நாட்டின் குடிமக்களுக்கு உள்ள அடிப்படை உரிமையாகும்” என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
“இந்த வழக்கின் மனுதாரர், ‘பாஜக அரசு, ‘அமித்ஷா ஒழிக’ போன்ற முழக்கங்களை மட்டுமே எழுப்பியுள்ளார். நாட்டின் குடிமக்களால் ஏன் இதுபோன்ற முழக்கங்களை எழுப்ப முடியாது? இந்த சாதாரண முழக்கங்களுக்காக ஒருவரை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிடுவது ஏன்?” என்று நீதிபதி மாதவ் ஜாம்தார் அரசுத் தரப்பிற்கு மிகக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும், மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு ஆதரவாகவும் பம்பாய் உயர் நீதிமன்ற நீதிபதி வெளியிட்டுள்ள இந்த கருத்துகள் தற்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
