காஞ்சிபுரத்தில் களைகட்டிய திராவிடர் எழுச்சி நாள்!

2 Min Read

காஞ்சிபுரம், ஜூலை 2- காஞ்சிபுரம் காமராசர் சாலை, பேருந்து நிலையம் அருகில், 9.6.2026 செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணியளவில்  முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாளையொட்டி திராவிடர் எழுச்சிநாள் பொதுக்கூட்டம் மாவட்ட கழகத்தின் சார்பில் நடைபெற்றது.

மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அ.வெ. முரளி தலைமை தாங்கி னார்.  மாவட்ட மாண வர் கழகத் தலைவர் அ.அருண்குமார் வரவேற்புரையாற்றினார்.

மாவட்டக் காப்பாளர் ச.வேலாயுதம், மாவட்டச் செயலாளர் கி.இளைய வேள், மாவட்ட துணைச் செயலாளர் சீத்தாவரம் ஆ.மோகன், வாலாஜாபாத் ஒன்றிய அமைப்பாளர் எஸ்.செல்வம், ஓய்வு பெற்ற வட்டாட்சியர் போளூர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உரையாற்றியோர்!  

மாவட்ட மகளிரணி அமைப்பாளர் அ. ரேவதி, மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பா.இளம்பரிதி, திமுக பேச்சாளர் தாவுத், தோழர் பெ.பழனி, மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட செயலாளர் த.கண்ணன், மக்கள் மன்றம் தோழர் மகா,  தமிழ் உரிமைக் கூட்டமைப்பின் மாநில செயலாளர் காஞ்சி அமுதன், இந்திய பொதுவுடமைக் கட்சியின் வழக்குரைஞர் லாரன்ஸ்,  மக்கள் அதிகாரக் கழகத்தின் சங்கர், திவெக கொள்கை பரப்புச் செயலாளர் அஷ்ரஃப், பெரியாரிய தோழர் இரவி பாரதி,  அறிவு வளர்ச்சி மன்றத்தின் நிறுவனர் நாத்திகம் நாகராசன்  ஆகியோர் உரையாற்றினர்.

திமுக கொள்கை பரப்புச் செயலாளர் வழக்குரைஞர் சி.வி.எம்.பி.எழிலரசன் மற்றும் திராவிடர் கழக துணை பொதுச்செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

உரையில் உதிர்ந்த முத்துக்கள்!

சிறப்புரையாற்றிய திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தனது உரையில், முத்தமிழறிஞர் கலைஞருக்கும் தந்தை பெரியாருக்கும் ஆசிரியர் கி.வீரமணிக்கும் திராவிடர் கழகத்திற்குமான உறவை தெளிவுபடுத் திப் பேசியதோடு, கலைஞரின் வாழ்நாள் சாதனைகளை வரிசைப் படுத்தி எடுத்துரைத்தார். ஒரு மணி நேரம் உரை யாற்றிய அவரின் உரை பங்கேற்பாளர்களின்  பாராட்டுகளைப் பெற்றது.

இறுதியாக,  மாவட்ட இளைஞரணித் தலைவர் வீ.கோவிந்தராஜ் நன்றியுரையாற்றினார்.

கலந்து கொண்டோர்!

கூட்டத்தில் திமுக பகுதி கழகச் செயலாளர்கள் கே.திலகர், சு.வெங்கடேசன், மாமன்ற உறுப்பினர்கள் கமலக்கண்ணன், குமரவேல், ஒன்றிய துணைச் செயலாளர் மாரிமுத்து, எழில்குமார், மாவட்ட மாணவர் கழக துணை அமைப்பாளர் ராம் பிரசாத்,  மாநகர இளைஞரணி அமைப்பாளர் பா.சுகுமார், நந்தா, சாகுல் ஹமீது, எஸ்.செந்தில், கே.சண்முகம், மகாதேவன், தனலட்சுமி, கீதா, கலைவாணி, மகேஷ், குப்பன், இராமு, சசிகுமார், சந்திப்குமார், சண். சுரேஷ், நரசிம்மன்.  சிபிஅய் மாவட்ட செயலாளர் பி.வி.சீனிவாசன், தொகுதி பொறுப்பாளர் ஜெ.கமலநாதன், மக்கள் மன்றம் தோழர்கள் மகேஷ், ஜெஸி, பாலு, மாபெபொக கோபாலகிருட்டிணன், பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் க.சேகர்,  ந.சக்திவேலன், அ. வெ.சிறீதர், பெ.சின்னதம்பி, நாகை லெனின், கவிதம்பி, பாரதி விஜயன், படப்பை சந்திரசேகரன் உள்ளிட்ட தி.க,  திமுக,   ப.க, சிபிஅய், மக்கள் மன்றம், மக்கள் நீதி மய்யம், திராவிடர் வெற்றிக் கழகம், ம.அ.க., மா.பெ.பொ.க. தோழர்கள் பெருமளவில் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். திராவிடர் எழுச்சி நாள் கூட்டம் மிகுந்த எழுழ்ச்சியை உண்டாக்கியது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *