கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 30.6.2026

2 Min Read

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* மோடி அரசின் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு தெலங்கானா அரசு கடும் எதிர்ப்பு. மாநிலங்களுக்கு அதிகச் சுமையை ஏற்படுத்தும் என ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சவுகானிடம் மனு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* மேற்கு வங்கத்தில் 77 முஸ்லிம் சமூகங்கள் ஓபிசி பட்டியலில் இருந்து நீக்கம்: இடஒதுக்கீடு 7% ஆக குறைப்பு. இதன் மூலம், முந்தைய திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஓபிசி பட்டியலில் சேர்க்கப்பட்ட 77 முஸ்லிம் சமூகங்கள் அந்தப் பட்டியலில் இருந்து அதிகாரபூர்வமாக நீக்கப்பட்டுள்ளன. மேலும், ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீடு அளவு 10 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* மகாராட்டிர மாநிலத்தில் அனைத்து கல்வி வாரியங்களின் கீழ் செயல்படும், அனைத்து மொழி வழிப் பள்ளிகளிலும் 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை ஒரு பாடப்பிரிவாக மராத்தி மொழியை கற்பிப்பதும், அந்த பாடத்திற்கு கட்டாயத் தேர்வு நடத்துவதும் சட்டப்பூர்வமாக கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தி இந்து:

* மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக கார்கே மீண்டும் நியமனம்; ஜூன் 26 முதல் அமலுக்கு வரும் வகையில், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராகவும் கார்கே மீண்டும் நியமிக்கப்பட்டார்.

தி டெலிகிராப்:

* மோடி அரசின் “அச்சே தின்” (நல்ல நாட்கள்) என்ற முழக்கமும் ஒரு “பொய்”. நாட்டைச் சூறையாடி யதுடன், பகவான் ராமனைக் கூட விட்டுவைக்காத பாஜக அரசை தோற்கடிக்குமாறு மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் மக்களிடம் வலியுறுத்தல்.

* மூன்று மாதங்களுக்கு முன்பே நடவடிக்கை எடுக்க எஸ்பிஐ (SBI) கோரியிருந்தது; ராமர் கோயில் நன்கொடை மைய ஊழியர்களைப் பாதுகாத்தது யார்?: காங்கிரஸ் கேள்வி. ராமர் கோயில் நிர்வாகத்தை ஆர்எஸ்எஸ் (RSS) மற்றும் பிரதமர் அலுவலகம் (PMO) நேரடியாக கவனித்து வந்தன என்று பவன் கேரா குற்றம் சாட்டியுள்ளார்: “அயோத்தியாநாத்திடம் கேளுங்கள் – அங்கு முறைகேடு நடந்திருந்தால், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் இல்லத்திற்கோ அல்லது பிரதமர் அலுவலகத்திற்கோ புல்டோசர்கள் அனுப்பப்படுமா?” என கேள்வி.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* புதிய மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவியேற்பு: எண்ணிக்கை பலம் என்டிஏ (NDA) பக்கம் மேலும் சாய்ந்தது. பெண்களுக்கான இட ஒதுக்கீடு 2029 மக்களவைத் தேர்தலிலேயே அமல்படுத்தும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *