காவல் பணியாளர் (ஸ்பெஷல் கிரேடு) எல். ராம்பகதூர் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா

1 Min Read

1985 முதல் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி நிறுவனத்தில் 41 ஆண்டுகள் பணியாற்றி, ஜூன் 30, 2026இல் பணி நிறைவு செய்யும் எல். ராம்பகதூர் அவர்களின்  பணி நிறைவு பாராட்டு விழா, நிறுவனத் தலைவர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் இன்று (26.6.2026)  காலை 9.30 மணியளவில் நடைபெற்றது. இவ்விழாவில் இக்கல்லூரி நிறுவனத்தின் துணை முதல்வர் முனைவர் ஜி. ரோஜா, வரவேற்புரை வழங்கி, எல். ராம்பகதூர்  ஆற்றிய பணிகளைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். இந்நிறுவனத்தின் முதல்வர் கே.பி. வெள்ளியங்கிரி, முன்னாள் துணை முதல்வர் டாக்டர் எச். பர்வின் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இவ்விழாவில் நிறுவனத் தலைவர் கி. வீரமணி அவர்கள்  தலைமையுரை ஆற்றும்போது, எல். ராம்பகதூர் அவர்களின் ஒழுக்கம், நேர்மை, அர்ப்பணிப்புப் பணிகளை  விரிவாக எடுத்துரைத்து, ஒரு கல்வி நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அனைத்துப் பணியாளர்களின் ஒத்துழைப்பு தேவை என்பதை வலியுறுத்தினார்.  ஏற்புரை வழங்கிய எல். ராம்பகதூர், தனக்கு வாய்ப்பளித்த நிறுவனத்திற்கும்,  நிறுவனத் தலைவர்  அவர்களுக்கும் நன்றி கூறினார். இறுதியாக முதன்மையர் ஜி. ராஜாராமன் நன்றியுரை வழங்கினார். எல். ராம்பகதூர் – ராம்குமாரி இணையருக்கு நிறுவனத் தலைவர் கி. வீரமணி பொன்னாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார். கல்லூரி சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *