ஏழுமலையான் என்ன செய்கிறான்? போலி சிபாரிசுக் கடிதங்கள் மூலம் ஏழுமலையான் பக்தர்களிடம் ரூ.4.22 லட்சம் மோசடி!

1 Min Read

திருமலை, ஜூன் 24- திருமலையைச் சேர்ந்த இடைத்தரகர் நிம்மல சிறீநிவாஸுடன் குண்டூ ரைச் சேர்ந்த சிறீநிவாச ரெட்டி பழகி வந்துள்ளார்.

கடந்த 22ஆம் தேதி, தனது உற்றார், உறவினர்கள் என மொத்தம் 60 பேருக்கு ஏழுமலையான் தரிசனம், திருமலையில் தங்கும் அறை போன்றவை வேண்டும் என சிறீநிவாச ரெட்டி கேட்டுள்ளார்.

இதற்காக விஅய்பி தரிசனத்திற்காக 60 பேருக்கு ரூ.3.60 லட்சம், 12 தங்கும் அறைகளுக்காக ரூ.62 ஆயிரம் என மொத்தம் ரூ.4.22 லட்சத்தை வங்கி மூலம் சிறீநிவாச ரெட்டி, நிம்மல சிறீநிவாஸுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இவர்கள் அனைவ ருக்கும் கடந்த ஜூன் 22ஆம் தேதி தரிசனம் செய்து வைப்பதாக நிம்மல சிறீநிவாஸ் கூறி, சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற  உறுப்பினர்களின் பெயரில் போலி சிபாரிசு கடிதங் களை தயாரித்துக் கொடுத் துள்ளார்.

திருமலையில் உள்ள கூடுதல் நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் அந்த கடிதங்களை கொடுத்துள்ளனர். இவை அனைத்தும் போலி என தெரிய வந்தது. இது குறித்து அவர்கள் திருமலை முதலாவது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து தலைமறைவாகி உள்ள இடைத்தரகர் நிம்மல சிறீநிவாஸ் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் அவரை தேடி வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *