திருமலை, ஜூன் 24- திருமலையைச் சேர்ந்த இடைத்தரகர் நிம்மல சிறீநிவாஸுடன் குண்டூ ரைச் சேர்ந்த சிறீநிவாச ரெட்டி பழகி வந்துள்ளார்.
கடந்த 22ஆம் தேதி, தனது உற்றார், உறவினர்கள் என மொத்தம் 60 பேருக்கு ஏழுமலையான் தரிசனம், திருமலையில் தங்கும் அறை போன்றவை வேண்டும் என சிறீநிவாச ரெட்டி கேட்டுள்ளார்.
இதற்காக விஅய்பி தரிசனத்திற்காக 60 பேருக்கு ரூ.3.60 லட்சம், 12 தங்கும் அறைகளுக்காக ரூ.62 ஆயிரம் என மொத்தம் ரூ.4.22 லட்சத்தை வங்கி மூலம் சிறீநிவாச ரெட்டி, நிம்மல சிறீநிவாஸுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இவர்கள் அனைவ ருக்கும் கடந்த ஜூன் 22ஆம் தேதி தரிசனம் செய்து வைப்பதாக நிம்மல சிறீநிவாஸ் கூறி, சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயரில் போலி சிபாரிசு கடிதங் களை தயாரித்துக் கொடுத் துள்ளார்.
திருமலையில் உள்ள கூடுதல் நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் அந்த கடிதங்களை கொடுத்துள்ளனர். இவை அனைத்தும் போலி என தெரிய வந்தது. இது குறித்து அவர்கள் திருமலை முதலாவது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து தலைமறைவாகி உள்ள இடைத்தரகர் நிம்மல சிறீநிவாஸ் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் அவரை தேடி வருகின்றனர்.
