அமெரிக்காவில் உள்ள, ‘‘பெரியார் பன்னாட்டு அமைப்பு” 1996 ஆம் ஆண்டு முதல், சமூகநீதிக்காகப் பாடுபடுகின்ற ஆளுமைகளுக்கு, ‘‘சமூகநீதிக்கான கி.வீரமணி விருது” எனும் பெயரில் விருது வழங்கி, சமூகநீதிக்குப் பெருமை சேர்த்துவருகிறது. இதுவரை சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் முதல், சமூகநீதிக்கான செயல்பாட்டாளர் வித்யா பூசன் ராவத் ஆகியோர் வரை இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில், 2026 ஆம் ஆண்டுக்கான விருதாளராக, திராவிடர் கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி,பூங்குன்றன் தேர்வு செய்யப்பட்டிருப்பதை முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், கவிஞருக்குப் பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார். உடன் கழகப் பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், பெரியார் திடல் மேலாளர் ப.சீதாராமன், எமரால்டு பதிப்பகம் முனைவர் கோ.ஒளிவண்ணன் (சென்னை, 22.06.2026).
