ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய, நகரக் கலந்துரையாடல் கூட்டம்

2 Min Read

உரத்தநாடு, ஜூன் 23- 19.06.2026 மாலை 6 மணி அளவில் ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய, நகரக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் ஒரத்தநாடு பெரியார் மன்றத்தில் நடைபெற்றது.

உரத்தநாடு வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆ. சுப்ரமணியன் வந் திருந்தோர் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி. அமர்சிங் தலைமை யேற்று உரையாற்றினார்

,தஞ்சை மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, மாவட்டதுணைச் செயலாளர் ரெ.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையேற்றுஉரையாற்றினார்

இக்கூட்டத்தின் நோக்க உரையாக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் இன்றைய (14.06.2026) அறிக்கையை முழுவதுமாக படித்துக் காட்டி தீரர்மிகு இளைஞர்களாக இளைஞரணியை மென்மேலும் வளர்க்க வேண்டும் அதற்கு ஆயிரம் இளைஞர்களை தயார் செய்ய வேண்டும் என்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பெரு விருப்பத்தினையும் விடுதலை சந்தா சேர்த்தல், தமிழர் தலைவர் அவர்களின் இடையறாப் பணிகள், அதன் தாக்கம். தோல்வியைக் கண்டு துவளாமல் மீண்டும் மீண்டும் சமூகப் பணியில் தொய்வில்லாமல் உழைத்து வரும் தமிழர் தலைவர் அவர்கள் பணியாற்றும் வியத்தகு திறன், குற்றாலத்தில் ஜூன் 25, 26, 27, 28 தேதிகளில் நடைபெறும் பயிற்சிப் பட்டறைக்கு முகாமில் இளைய தோழர்கள் தவறாது பங்கேற்க வேண்டும் என்றும், கழக ஆக்கப் பணிகள் குறித்தும் கருத்துரைத்தார்.

ஒத்தநாடு நகரத் தலைவர் ரவிச்சந்திரன் நகரச் செயலாளர் செந்தில்குமார், நகர இளைஞரணிச் தலைவர் சா பிரபாகரன் நகர இளைஞரணிச் செயலாளர், காக்ரக்ரடீஸ், ஒன்றிய செயலாளர் சுப்ரமணியன் வடக்கு ஒன்றிய தலைவர் துரைராஜ் வடக்கு ஒன்றிய இளைஞரணி துணைச் செயலாளர் ராஜதுரை வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் கக்கரை கோ. இராமூர்த்தி, கண்ணை கிழக்கு கிளைக் கழகத் தலைவர் செந்தில்குமார் செயலாளர்ப.தாமரைக்கண்ணன் ஒன்றிய விவசாய அணித் தலைவர் பஞ்சநதிக்கோட்டை பாரதிதாசன் ஒன்றிய விவசாய அணிசெயலாளர் தலைமங்கலம் ராமதாஸ் தலைமைக் கழக சொற்பொழிவாளர் முனைவர்

ராஜவேல், குலமங்கலம் சின்னையன் ஆகியோர் கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கத்தில் தங்களது பங்களிப்பு குறித்தும், கழக ஆக்கப் பணிகளின் தேவை குறித்தும் கருத்துகளை எடுத்து வைத்தனர்.

இறுதியாக மாவட்ட கழகத் தலைவர் சி.அமர்சிங் விடுதலை சந்தா சேர்த்திட ஒவ்வொரு ஊராகச்செல்ல பயணத் திட்டமும், 1000 பேர் இளைஞரணி படையில் நம் மாவட்டத்தின் பங்கு அதில் இந்த ஒன்றியத்தில் எந்தெந்த ஊர்களில் நம் கழகக் குடும்பத்தில் இளைஞர்கள் உள்ளனர், அவர்களை அணுகிப் பட்டியல் தயார் செய்ய அறிவுறுத்தினார்.

மாவட்டக் கலந்துரையாடல் கூட்டத்தில் தோழர்கள் பொறுப்பாளர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும்  எடுத்துக் காட்டி உரையாற்றினார்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

புதிதாக விடுதலைச் சந்தாக்களை சேர்த்தும் இந்த மாதத்தில் முடிவடையும் விடுதலை சந்தாதாரர்களை புதுப்பித்தும் தருவது எனவும்,

தமிழர் தலைவர் அவர்களின் ஆணைக்கேற்ப தீரமிக்க கழக இளை ஞர்களின் ஆயிரம் பேரை திரட்டும் பணி யில் திருவையாறு ஒன்றியத்தின் சார்பாக  இளைஞர்களின் பட்டியலை தமிழர் தலைவர் அவர்களிடம் ஒப்படைப்பது எனவும்,

ஒன்றியத்தின் சார்பாக கிராமப்பு றங்களில் தொடர்ந்து  கழகக் கூட்டங்கள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *