திராவிட மாணவர் கழகம் சார்பாக மேட்டுப்பாளையத்தில் மாணவர் சந்திப்புக் கூட்டம்

1 Min Read

மேட்டுப்பாளையம், ஜூன் 21- மேட்டுப்பாளையம் மாவட்டம் குட்டை புதூர் பகுதியில் திராவிட மாணவர் கழகம் சார்பாக மாணவர் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கழகத் தலைவர் சு.வேலுச்சாமி தலைமை தாங்கினார்.

மாநில கழக இளைஞர் அணிதுணைச் செயலாளர் மு.வீரமணி முன்னிலை வகித்தார். ந.விக்னேஷ் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் கா.சு அரங்கசாமி தொடக்க உரையாற்றினார்.

மாநில திராவிட மாணவர் கழக இணை செயலாளர் மு.இளமாறன், மாநில மாணவர் கழகத் துணைச் செயலாளர் தேவ.நர்மதா, மு.இராகுலன் ஆகியோர் மாணவர்களுடன் கலந்துரையாடினர். மாநில திராவிடர் மாணவர் கழகத்தின் செயலாளர் இரா செந்தூரப்பாண்டியன் சிறப்புரையாற்றினார்.

மாவட்ட இளைஞர் அணி தலைவர் ந.பிரதீப் நன்றியுரை கூறினார். மாவட்ட கழக துணைச் செயலாளர் க.நாராயணன் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். கலந்து கொண்ட அனைவருக்கும் தேக்கம்பட்டி மற்றும் சிவகுமார் சமையல் குழு சார்பாக மதிய உணவு வழங்கப்பட்டது.

கூட்டத்தில் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். பொறுப்பாளர்களை மாவட்டத் தலைவர் சு.வேலுச்சாமி பரிந்துரைக்கு ஏற்ப மாநில மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூரபாண்டியன்  அவர்களால் நியமிக்கப்பட்டனர்.

தலைவர்: ந.விக்னேஷ் குமார்,

துணைத் தலைவர்: மூ.பரத்

செயலாளர்: மோ.விஷ்ணு

துணைச் செயலாளர்: சி ராகுல்

மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறிய கிராமத்தில் இந்நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *