சிங்கம்புணரி, ஜூன் 21 திண்டுக்கல் மாவட்ட மலைப் பகுதிகளில் இருந்து உற்பத்தியாகும் பாலாற்றின் குறுக்கே, மதுரை மாவட்டத்தில் புதிய தடுப்பணை கட்ட அரசு திட்டமிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவ கங்கை மாவட்டம் சிங்கம் புணரியில் கண்டன ஆர்ப் பாட்டமும், கடையடைப்பும் நடத்தப்பட்டன.
தரைமட்டமாகும் விவசாயம்
விவசாயிகள் கவலை
திண்டுக்கல் மாவட்டத்தின் முதிமலை, அய்யலூர், கோடாங்கி குட்டு மற்றும் கரந்தமலை ஆகிய மலைப் பகுதிகளில் இருந்து பாலாறு உற்பத்தி ஆகிறது. இந்த காட்டாறானது திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை (சிங்கம்புணரி, திருப்புத்தூர் வழியாக) மாவட்டங்களைக் கடந்து ராமநாதபுரம் வரை செல்கிறது.
இந்நிலையில், மதுரை மாவட்டம் பொட்டல்பட்டி கிராமம் சூரம்பட்டி பகுதியில் ரூ. 9 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டுவதற்கான பணி அறிவிப்பு வெளியிடப் பட்டு, பணிகள் தொடங்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
“இங்கு தடுப்பணை கட்டப்பட்டால், மிகக் கடுமை யான பெருமழை பெய்தால் மட்டுமே சிங்கம்புணரி பகுதிக்கு தண்ணீர் வரும் நிலை உருவாகும். பாலாற்றில் நீரின் அளவு குறைந்து, நிலத்தடி நீர்மட்டம் கடுமையாகப் பாதிக்கும். இதனால் விவ சாயம் முற்றிலும் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.”
இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சிங்கம்புணரி, கிருங்காக்கோட்டை, காளாப்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஏற்ெகனவே மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரி களைச் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்திருந்தனர்.
அதிகாரிகள் தரப்பில் உரிய நடவடிக்கை இல்லாததால், நேற்றுமுன்தினம் (19.6.2026) விவசாயிகள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஊர்வலம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிங்கம்புணரி சேவகப் பெருமாள் கோயிலில் இருந்து 2,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பெண்கள் கைகளில் பதாகைகளை ஏந்தி, பேருந்து நிலையம் வரை பேரணியாகச் சென்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முழு கடையடைப்பு: விவசாயிகளுக்கு ஆதரவாக சிங்கம்புணரி வணிகர் நலச்சங்கம் சார்பில் காலை முதல் மதியம் வரை அனைத் துக் கடைகளும் அடைக்கப் பட்டன.
அரசு இந்த தடுப்பணை விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, உரிய நடவ டிக்கை எடுக்காவிட்டால், அடுத்தகட்டமாக தேசிய நெடுஞ்சாலையை முற்றுகை யிட்டுப் போராட்டம் நடத் தப்படும் என விவசாய சங்கப் பிரதிநிதிகள் எச்சரித்துள்ளனர். இந்த போராட்டத்தால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
