தூத்துக்குடி, ஜூன் 21 மைசூருக்கு அடுத்தபடியாக தசரா விழா கொண்டா டப்படும் இடமாக தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் ‘‘அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில்’’ திகழ்கிறது. ஏராளமான பக்தர்கள் வந்து செல்லும் இக்கோயிலில், சமீப காலமாக தற்காலிகப் பணியாளர்கள் பக்தர்களிடம் அத்துமீறுவதும், அவதூறான வார்த்தைகளால் பேசுவதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு கோயிலுக்கு வழிபாடு செய்ய சிவப்பு நிற சுடிதார் அணிந்த ஒரு பெண்ணும், சிவப்பு நிற வேட்டி, டி-சர்ட் அணிந்த அவரது கணவரும் வந்துள்ளனர். அப்போது அங்கு பாதுகாப்பு மற்றும் இதர பணிகளில் இருந்த தற்காலிக பணியாளர்கள் சிலர், பிற பக்தர்களிடம் தவறான முறையில் பேசுவதை இந்த இணையர் கவனித்துள்ளனர். இதனை அவர்கள் தட்டிக்கேட்டதாகக் கூறப் படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த நீல நிற (புளு கலர்) சட்டை அணிந்திருந்த தற்காலிக பணியாளர்கள் இருவர், அந்த இணையருடன் கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுபட்டு, அவர்களைத் தாக்க முயன்றனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அங்கு வந்த சில தூய்மைப் பணியாளர்களும் தற்காலிக பணியாளர் களுடன் சேர்ந்துகொண்டனர்.
பின்னணி மற்றும் தாக்குதல்
எதிர்பாராத விதமாக, அங்கிருந்த ஊழியர்கள் அனைவரும் சேர்ந்து அந்த பெண் பக்தரை மிகக் கொடூரமாகத் தாக்கினர். இதனைத் தடுக்க முயன்ற அவரது கணவரையும் அவர்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர்.
இந்த அதிர்ச்சியூட்டும் தாக்குதல் சம்பவத்தை அங்கிருந்த சிலர் தங் களது கைப்பேசியில் காட்சிப்பதிவாக பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகி, பொதுமக்கள் மற்றும் ஆன்மீகப் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி வைரலாகி வருகிறது. இதே போல் ராமேசுவரத்திலும் கோவிலுக்கு வந்தவர்கள் இரு குழுக்களாக பிரித்து ஒருவரை ஒருவர் அடித்துகொண்டனர்.
அப்போது அமைச்சர் ஒருவர் அங்கு ஆய்வு நட்த்திக்கொண்டு இருந்தார் என்பதும் குறிப்பிட்டத்தக்கது
