டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சொன்ன திருத்தங்களுடன் மேகதாது பிரச்சினையில் அரசினர் தனித் தீர்மானம்: அனைத்துக் கட்சி ஆதரவுடன் பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* நீட் தேர்வு மோசடியின் காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு மோடி அரசு ரூ.1 கோடி இழப்பீடு அளிக்க வேண்டும்; கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே, பிரதமர் மோடிக்கு கடிதம்.
* திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்று கட்சி மாறிய 20 நாடாளுமன்ற உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்ய, அக்கட்சியின் பொதுச் செயலாளர் அபிஷேக், மக்களவை தலைவர் ஓம் பிர்லாவிடம் நேரில் முறையிட்டார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* இந்தியாவுக்கு பதிலாக பாரத்: ராஜஸ்தான் ஜபல்பூரில் உள்ள ராணி துர்காவதி பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொள்கிறார்; அங்கு வழங்கப்படும் அனைத்து பட்டங்களிலும் ‘இந்தியா’ என்பதற்குப் பதிலாக ‘பாரத்’ என்ற பெயர் இடம்பெறவுள்ளது. ஆர்எஸ்எஸ் (RSS) தொடர்புடைய அமைப்பின் தூண்டுதலால், பல பல்கலைக்கழகங்கள் தங்கள் பட்டங்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல்களில் ‘இந்தியா’ (INDIA) என்ற பெயருக்குப் பதிலாக ‘பாரத்’ (BHARAT) என்பதைப் பயன்படுத்துகின்றன.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ‘ஆபரேஷன் டைகர்’ (OPERATION TIGER) என்பது ஒரு முன்னோட்டம் மட்டுமே: சிவசேனாவின் நிறுவன நாள் பேரணியில் மகாராட்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே பேச்சு. கூட்டத்தில் பேசிய ஷிண்டே, ‘ஆபரேஷன் டைகர்’ நடவடிக்கைக்குப் பிறகு “பல நாய்கள் குரைக்க தொடங்கியுள்ளன” என்று கூறினார். மந்தையாக செல்லும் ஆடுகளைப் போலல்லாமல், வேட்டையாடுவதற்கென்றே பிறக்கும் புலி தனியாகவே இயங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தி இந்து:
* நடைபாதையில் நடப்பது ஒரு அடிப்படை உரிமை: உச்சநீதிமன்றம், குறிக்கப்பட்ட மற்றும் நன்கு பராமரிக்கப்படும் நடைபாதைகளில் நடப்பதற்கான சுதந்திரம் ஓர் அடிப்படை உரிமை என்றும், அது மோட்டார் வாகனங்களின் போக்குவரத்தை விட முன்னுரிமை பெற்றது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.
* நாகாலாந்தில் 3-மொழி கொள்கை நடைமுறைக்கு சாத்தியமற்றது: சிபிஎஸ்இ (CBSE) பள்ளிகள் கருத்து. தனித்துவமான மொழிகள் மற்றும் வாய்மொழி மரபுகளை கொண்ட 17-க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட முக்கிய பழங்குடியினரைக் கொண்ட மாநிலம் என்பதால், மாநிலத்திற்கு நெகிழ்வானதொரு கட்டமைப்பை வழங்க வேண்டும் என்று 19 பள்ளிகளின் முதல்வர்கள் கல்வி அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளனர்.
– குடந்தை கருணா
