ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோதச் சட்டங்களை தமிழ்நாட்டில் அமல்படுத்தக் கூடாது த.வெ.க. அரசுக்கு சி.அய்.டி.யு. வலியுறுத்துல்

3 Min Read

உதகை, ஜூன் 16 – ஒன்றிய அரசின் நான்கு தொழிலாளர் விரோதச் சட்டங்களை அமல்படுத்த மாட்டோம் என்று தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் என சிஅய்டியு வலியுறுத்தியுள்ளது.

சிஅய்டியு தமிழ்நாடு மாநிலக் குழுக் கூட்டம், உதகையில் மாநிலத் தலைவர் ஜி. சுகுமாரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், தொழிலாளர் பிரச்சினைகள், சட்ட விரோதமான பணி நீக்கங்கள், தொழிற்சங்க உரிமைப் பாதுகாப்பு, குறைந்த பட்சக் கூலி, பெண் தொழி லாளர்களின் பாதுகாப்பு போன்றவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன.

பின்னர், சிஅய்டியு அகில இந்திய துணைத் தலைவர் அ. சவுந்தரராசன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித் தார். அப்போது அவர் கூறியதாவது

முதலமைச்சரிடம் சிஅய்டியு முன்வைத்த 25 கோரிக்கைகள்

தமிழ்நாட்டின் புதிய முதலமைச் சர் ச. ஜோசப் விஜய்யை, சிஅய்டியு சார்பில் சந்தித்து, 25 கோரிக்கைகள் அளிக்கப் பட்டுள்ளன. பன்னாட்டு நிறுவனங்கள் வருவதற்கு ஆதரவு அளிக்கிறோம். ஆனால், தொழிலா ளர்களுக்கு நியாயமான கூலி, சட்டப்பூர்வ உரிமைகள், தொழிற்சங்க உரிமை ஆகியவை பின்பற்றப்பட வேண்டும்; தொழிலாளர் துறையில் கடும் ஆள் பற்றாக்குறை, செயல்பாடு குறைவை சீரமைக்க வேண்டும். ஒன்றிய அரசின் நான்கு தொழிலாளர் விரோத சட்டங்கள் தொழிலாளர் களுக்கு தீங்கானவை என்பதுடன், ரத்து செய்யப்பட வேண்டியவை. தமிழ்நாட்டை பொறுத்தவரை, அவற்றை அமல்படுத்த மாட்டோம் என்று தவெக அரசு அறிவிக்க வேண்டும்.

பல பன்னாட்டு தொழிற் சாலைகளில் நடைபெற்று வரும், அநியாய இடமாற்றம், இடைநீக்கம் போன்றவற்றுக்குத் தீர்வு வேண்டும். தொழிற்சாலைகள் மூடப்படு வதற்கு ஒருநாளும் தொழிற்சங்கங்கள் காரணமாக இருந்தது இல்லை. அந்த நிறுவனங்களின் சந்தை, மேலாண்மை குறைபாடுகள், மாசு பாடு, அரசின் கொள்கை போன்றவை தான்.

ரூ. 26 ஆயிரம் குறைந்தபட்ச கூலியை அமல்படுத்த வேண்டும்

தமிழ்நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பெற்றுள்ளது என்றால், ஏழை தொழிலாளர்களின் வருமானம் அதி கரிக்க வேண்டும். ஆனால், குறைந்த பட்ச கூலி ரூ. 26,000 அமலாகவில்லை. இந்த விடயத்தில், முத்தரப்புக் குழுவை தமிழ்நாடு அரசு உடனே மீண்டும் அமைக்க வேண்டும். பெண் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பாதுகாப்பு, சம ஊதியம், தனிக் கழிப்பறை, மகப்பேறு நலன்கள் போன்றவை உறுதி செய்யப்பட வேண்டும்.

போக்குவரத்து – டாஸ்மாக் ஊழியர் பிரச்சினைக்கு தீர்வு

தோட்டத் தொழிலாளர்களுக்கான பழைய சட்டங்கள் ரத்து செய்யப் பட்டதால், வீடு, மருத்துவம், கல்வி போன்ற நலன்கள் இல்லாமல் போயுள் ளன. அவை மீண்டும் உறுதி செய்யப்பட வேண்டும். போக்குவரத்துத் துறையில் தற்காலிக ஊழியர்களின் நிரந்தரம், அநியாய இடமாற்றங்கள் ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும். டாஸ்மாக் மதுபானக் கடை மூடலால் வேலை இழந்தவர்களுக்கு மாற்று அரசு வேலை வழங்கப்பட வேண்டும்.

துயரங்களை அனுபவிக்கும் நடைபாதை வியாபாரிகள்

சுயதொழில் செய்பவர்கள், நடைபாதை வியாபாரிகள், ஆட்டோ தொழிலாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அளிக்கும் துன்புறுத்தல்கள் தடுக்கப்பட வேண்டும். பழங்குடியினர் மாற்றுக் குடியமர்வு பிரச்சனை, டான்டீ தொழிலாளர்கள் பிரச்சனை, தூய்மைப் பணியாளர் தினக்கூலி உயர்வு— இவை அனைத்தும் புதிய அரசுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. உதகையில் புதிய தொழிற்சா லைகள் இல்லாமை, அரசுத் துறைகளில் ஆட்கள் குறைவு ஆகியனவும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப் பட்டுள்ளன.

தொடர் போராட்டங்களை  சிஅய்டியு முன்னெடுக்கும்!

எனவே, தொழிலாளர்களின் உரிமை, நலன், பாது காப்பு, நியாயமான கூலி, தொழிற்சங்க உரிமை ஆகியவற்றுக் காக சிஅய்டியு தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுக்கும். இவ்வாறு அ. சவுந்தரராசன் கூறினார்.

தமிழ்நாட்டில்  பெண்கள், குழந்தைகள் மீதான குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், இவற்றுக்கு கடுமை யான நடவடிக்கை அவசியம். ஆளுங்கட்சியில் இருந்தாலும் குற்றவாளிகளை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் அ. சவுந்தரராசன் குறிப்பிட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *