பூதலூர் – திருக்காட்டுப்பள்ளியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழா

1 Min Read

திருக்காட்டுப்பள்ளி, ஜூன் 17- பூதலூர் ஒன்றியம் திருக் காட்டுப்பள்ளியில் ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பில் 7.6.2026 அன்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்தநாள் தெருமுனைக் கூட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் மா.வீரமணி தலைமை ஏற்றார். ஒன்றியச் செயலாளர் இரா பாலு வரவேற்று உரையாற்றினார். மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர்ஞர் சி.அமர்சிங் மாவட்ட கழகச் செயலாளர் வழக்குரைஞர் அருணகிரி திமுக வடக்கு ஒன்றியச் செயலாளர் கல்லணை செல்லக்கண்ணு நகர திமுக செயலாளர் பி. ஜெயராமன் பேரூராட்சித் தலைவர் பி.மெய்யழகன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினார்கள்.

மாநில கழக ஒருங்கிணைப் பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் தொடக்க உரையில் கலைஞரின் பிறந்த நாளை நான்கு மாநிலங் களில் தமிழர் தலைவர் ஆசிரியர் வழிகாட்டுதலில் நடைபெறுவது பற்றி எடுத்துக் கூறினார். கழகப் பேச்சாளர் கலைவாணி வீரமணி, கழகப் பேச்சாளர் மாங்காடு மணியரசன் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர்.

இந்நிகழ்ச்சியில் தஞ்சை மாநகர செயலாளர் வீரக்குமார், மாநில மாணவர் கழக செயலாளர் செந்தூரபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் மு.சேகர், திருவையாறு ஒன்றிய தலைவர் சா.கண்ணன், திருவையாறு ஒன்றியச் செயலாளர் துரை. ஸ்டாலின், பூதலூர் ஒன்றிய துணைச் செயலாளர் பா. விஜயகுமார், பெரியார் பெருந்தொண்டர் வளப்பக்குடி தங்கவேல், மாவட்ட விவசாய அணி இரா. பாலசுப்பிரமணியன், ஒன்றிய ப. க.தலைவர் சிவசாமி பிரபு, ச.ஜீவா  மகளிர் அணித் தோழியர் பி. சுசீலா, அ.கருணாநிதி, அருமை.நாகராஜன் மற்றும் திமுக தோழர்கள் கழகத் தோழர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாநில ஊடகப்பிரிவுச் செயலாளர் மா. அழகிரிசாமி நிகழ்ச்சிகளை காணொலி மூலம் படம் பிடித்தார்கள் இறுதியாக ஒன்றிய துணைச் செயலாளர் இரெ.புகழேந்தி நன்றி உரையாற்றினார்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *