வேப்பிலைப்பட்டி, ஜூன் 17- அரூர் கழக மாவட்டம் வேப்பிலைப்பட்டியில் திராவிடர் எழுச்சி நாளை முன்னிட்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா தாய்க் கழகமாம் திராவிடர் கழகம் சார்பில் பரப்பரைப் பொதுக்கூட்டம் 5.6.2026ஆம் அன்று மாலை 6 மணி அளவில் மாவட்ட கழகத் தலைவர் அ.தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. கழக மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் த.மு.சுடரொளி வரவேற்புரையாற்றினார்.
மாவட்டச் செயலாளர் கு.தங்கராஜ், மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் மு.பிரபாகரன், திமுக மாவட்ட ஆதிதிராவிடர் நல குழு அமைப்பாளர் சொ.பாண்டியன், திமுக தொழில்நுட்ப அணிப் பொறுப்பாளர் கொ.கண்ணப்பன் விடுதலை வாசகர் வட்ட தலைவர் வ.நடராஜன், திமுக அவைத் தலைவர் மு.கணேசன், திமுக கிளை கழகச் செயலாளர் அ.தமிழரசன், தீ.அமுல்செல்வம், வேணுகோபால், தாழை ஜி.முருகன், இளைஞரணி மாவட்ட கழகத் துணைத் தலைவர் கு.அரிகரன், ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.
மேடையில் வைக்கப்பட்டிருந்த முத்தமிழறிஞர் கலைஞர் படத்திற்கு தோழர்களின் கொள்கை முழக் கத்திற்கிடையே மாநில மகளிர் அணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் பெ. கல்பனா, செயலாளர் த.மு. சுடரொளி இணைந்து மாலை அணிவித்தனர்.
மாநில பகுத்தறிவு கலைத்துறை செயலாளர் மாரி. கருணாநிதி, மாவட்ட கலைத்துறை தலைவர் கீரை.பிரபாகரன், திமுக மாநில ஆதிதிராவிட நலக்குழு துணை செயலாளர் அரூர் சா. இராஜேந்திரன், மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்செல்வி, திமுக தொழில்நுட்ப அணி பொறுப்பாளரும் விடுதலை வாசகர் வட்டத்தின் செயலாளருமான கே.ஆர். தங்கராஜ், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் கல்பனா, திருச்சி தோழர் பாலாஜி ஆகியோர் கருத்துரையாற்றினார்.
இறுதியாக கழக ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெயராமன் உரையைத் தொடர்ந்து கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் உரையாற்று கையில் வேப்பிலைப்பட்டி கிராமத் திற்கு நான் புதியவன் அல்ல ஏற் கனவே இரண்டு முறை வருகை தந்திருக்கிறேன் 35 ஆண்டுகளுக்கு முன்பு வேப்பிலைப்பட்டியில் அம் பேத்கர் அவர்களின் படத்தை திறந்து வைத்து பேசி இருக்கிறேன், வேப்பிலைப்பட்டி என்று என்றால் வேப்பமரம் அதிகமாக இருக்கும் ஊர் என்று கருதுகிறேன். பெரியாரின் கருத்துக்கள் பார்ப்பவர்களுக்கு கசப்பாக வேப்பிலையை போல் இருக்கும் அதைத் தின்று விட்டால் எந்த நோய் நொடியும் வராது தடுக்கும். இன்றைக்கு கலைஞர் அவர்களின் பிறந்தநாளை நான்கு மாநிலங்களில் நாடு தழுவிய அளவில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் திராவிடர் கழகத்தின் சார்பில் கொண்டாடப்படுகிறது.
தந்தை பெரியார் அறிஞர் அண்ணா கொள்கைகளை, ஏற்று சட்ட வடிவங்களாக வடித்து நடை முறைப்படுத்தியவர் முத்தமிழறி ஞர் கலைஞர் அவர்கள். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா அவர்கள் என்ன சொன்னார்களோ என்ன நினைத் தார்களோ என்ன எழுதினார்களோ அதை நடைமுறைப்படுத்தி காட்டியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள். அவர் கொண்டு வந்த சமூக நலத் திட்டங்கள் யாராலும் எவராலும் மறைக்க முடியாது. அவரைப் போலவே முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து சிறப்பாக நலத்திட்டங்களை செய்து வந்தார், மக்கள் மாற்றத்தை விரும்புகிறோம் என்று கூறி தேர்தலில் அவரை தோற்கடித்து விட்டார்கள். கலைஞர் அவர்களை இந்த நாடும் மக்களும் என்றைக்கும் மறக்க மாட்டார்கள் அவர் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பார் அவருக்கு திராவிடர் கழகம் சார்பில் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் பி வீரமணி அவர்களின் அறிவிப்புக்கு இணங்க பிறந்தநாள் கொண்டாடுவது மட்டற்ற மகிழ்ச்சிக்கு உரியதாகும் என்று பேசினார்.
நிகழ்ச்சிக்கு முன்னதாக மதம் மறுப்பு திருமணம் செய்து கொண்டு தன்னை திராவிடர் கழகத்தில் இணைத்துக் கொண்ட மொரப்பூர் தோழர் வித்தியாகர், சஜிதா பேகம் ஆகியோருக்கு தோழர்களின் ஆரவார கைதட்டலுக்கு இடையே திராவிடர் கழக பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரன் பயனடை அணிவித்து பாராட்டினார். வருகை தந்த பொறுப்பாளர்களுக்கும் சிறப்பு அழைப்பாளர்களுக்கும் சிறப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் சஞ்சீவன், மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் முருகம்மாள், கழக ஒன்றியச் செயலாளர் பச்சையப்பன், கடத்தூர் நகரத் தலைவர் இரா.நெடுமிடல், பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர் பாளையம் பசுபதி, திராவிடர் தொழிலாளர் கழகத்தின் மாவட்டத் தலைவர் வெ. சிலம்பரசன், மகளிர் அணிப் பொறுப்பாளர்கள் கலா, சுசீலா, மணிமொழி, அறிவொளி, சத்ரபதி, சித்தார்த்தன், சிந்தனையாளன், வேப்பிலைப்பட்டி திமுக தோழர்கள் பழனி,சின்னராஜ், தாளநத்தம் வேலுசாமி, முருகேசன், பெரியசாமி, கடவுள்குமார், உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக பகுத்தறிவாளர்களாக அமைப்பாளர் சுத்த தமிழரசு நன்றி கூறினார்.
