ஒன்றிய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

1 Min Read

ஒன்றிய மின் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மேம்பட்ட கணினி மேம்பாட்டு மய்யம் (சி-டி.ஏ.சி.) நிறுவனத்தில் காலியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. சென்னையிலும் பணியிடம் உள்ளது. இது பற்றிய விவரங்கள் வருமாறு:

பணி இடங்கள்: 67 (ஒப்பந்த அடிப்படை)

பதவி: புராஜெக்ட் அசோசியேட், புராஜெக்ட் என்ஜினீயர், புராஜெக்ட் மானேஜர், புரோகிராம் மானேஜர், புரோகிராம் டெலி வரி மானேஜர், புராஜெக்ட் டெக்னீஷியன், சீனியர் புராஜெக்ட் என்ஜினீயர், புராஜெக்ட் லீடர் உள்பட பல்வேறு பணிகள்

பணி இடம்: சென்னை, டில்லி, அய்தராபாத், மும்பை, கொச்சி, கோவா, லட்சத்தீவு, போபால், கார்வர், பெங்களூரு, திருவனந்தபுரம், போர்ட் பிளேர், விசாகப்பட்டடினம், திருவனந்தபுரம், பாட்னா, குஜராத், சில்சார்

கல்வித் தகுதி: பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக்., அய்.டி.அய்., டிப்ளமோ உள்ளிட்ட படிப்புகள்.

வயது: 20-6-2026 அன்றைய தேதிப்படி புராஜெக்ட் அசோசியேட், புராஜெக்ட் டெக்னீஷியன் பணிக்கு 30 வயதுக்குட்பட்டவர்களாகவும், புராஜெக்ட் என்ஜினீயர் பணிக்கு 45 வயதுக்குட்பட்டவர்களாகவும், சீனியர் புராஜெக்ட் என்ஜினீயர் பணிக்கு 40 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.

புரோகிராம் மானேஜர், புரோகிராம் டெலிவரி மானேஜர் உள்ளிட்ட பதவிக்கு 56 வயது என பணியின் தன்மைக்கேற்ப வயது வரம்பு மாறுபடும். அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. (மாற்றுத்திறனாளிகள் உள்பட)

தேர்வு முறை: ஷார்ட் லிஸ்ட், எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20-6-2026

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *