சென்னை, ஜூன் 17- தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 2026-2027 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு தொடங்கப்பட்டுள்ளது இதுதொடர்பாக தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக் கழகத்தின் பதிவாளர் செந்தில் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகாரம் பெற்றுள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தில் 15 இளங்கலை பட்டப்படிப்புகள், 14 முதுகலை பட்டப்படிப்புகள், 48 சான்றிதழ், பட்டய படிப்புகளை வழங்கி வருகிறது. இந்த படிப்புகளில் 2026-2027ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பல்கலை.யின் www.tnou.ac.in இணைய வழி மூலம் சமர்ப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதள முகவரிக்கு சென்று தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
TAGGED:தமிழ்நாடு
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
