பழனி, ஜூன் 17- பழனி மாவட்ட கழக சார்பில் 12.6.2026 அன்று மாலை 6-00 மணியளவில் பழனி மின்வாரியம் அருகில் தந்தை பெரியார் திடலில் கலைஞர் அவர்களின் 103ஆவது பிறந்தநாள், திராவிடர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்விற்க்கு மாவட்டத் தலைவர் பி.ஆர்.பி ஆனந்தகிருஷ்ணன் தலைமையேற்றார். மாவட்ட துணைத் தலைவர் மா.முருகன் வர வேற்று உரையாற்றினார்.
மாவட்டச் செயலாளர் பொன்.அருண்குமார் தொடக்கவுரையாற்றினார். மாநில மாணவர் கழக இணைச் செயலாளர் பேச்சாளர் மு.இளமாறன் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் பழனி தி.மு.க நகரச் செயலா ளர் ஆ.வேலுமணி, தமிழ் புலிகள் கட்சி மாநில முதன்மைச் செயலாளர் முகிலரசன், இந்திய குடியரசுக் கட்சி ஆறுமுகம், ம.ம.கட்சி ரியாஜ், கொங்கு இளைஞர் பேரவை காளிராஜ், தமிழ்புலிகள் கட்சி இரணியன், ஆதித் தமிழர் கட்சி பழனி மணி, ப.க திராவிடச்செல்வன், செந்தில், அழகர்சாமி, ராதாகிருட்டினன், ஆ.இராமகிருட்டினன், அறிவழகன், ச.பாலசுப்பிர மணி, பொ.பெ.இரணி யன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.
இறுதியாக பழனி நகரச் செயலாளர் மு.செந்தில் குமார் நன்றி கூறினார்.
