
ஆத்தூர், ஜூன் 17– 9.6.2026 அன்று நடைபெற்ற கலைஞர் பிறந்த நாள் கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் அ.சுரேஷ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்
நீ. சேகர் அனைவரையும் வரவேற்று பேசினார்.
மாவட்டக் காப்பாளர் த. வானவில், மாவட்ட காப்பாளர் இரா.விடுதலை சந்திரன், பக மாநில பொதுச்செயலாளர் வா. தமிழ்பிரபாகரன், பக மாவட்ட தலைவர் வ.முருகானந்தம், நகர தலைவர் வெ.அண்ணா துரை, நகரச் செயலாளர் தா. திவாகர் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
திமுக நகரச் செயலாளர் ஏ.ஜி.ராமசந்திரன், திமுக தகவல் தொழில் நுட்ப பிரிவு நகர பொறுப்பாளர் பால முருகானந்தம் ஆகியோர் தொடக்கவுயாற்றினார்கள்.
சிறப்புரையாக கழகப் பேச்சாளர் இராம.அன்பழகன் டாக்டர் கலைஞர் அவர்களின் 103ஆவது பிறந்தநாள் விழாவை ஏன் திராவிடர் கழகம் கொண்டாடுகிறது என்பதை பட்டியல் போட்டு பேசினார்.
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா அவர் களின் எண்ணங்களை தனது ஆட்சிக்காலத்தில் சட்டமாக நிறைவேற்றினார். தனது இளம் வயதிலிருந்தே தமிழ் மீது தீராத பற்றினால் இந்தி எதிர்ப்புப் போரில் கலந்து கொண்டு சிறை சென்றார். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, 33 சதவீத வேலைவாய்ப்பு காவல்துறையில் பணியில் அமர்த்தியது, பட்டபடிப்புவரை உதவித் தொகை, தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு, குடிசை மாற்று வாரியம் என பல அரிய தகவல்களைத் தந்தார். இந்த நிகழ்ச்சியில் கழகத் தோழர்கள் ஏராளமாக கலந்து கொண்டனர் மற் றும் கடைவீதி முழுவதும் பொதுமக்கள் ஆங்காங்கே நின்று கவனித்தனர். நிறை வாக மாவட்ட மாணவர் கழகச் செயலாளர் ச.அஜித் வருகை தந்த அனை வருக்கும் நன்றி கூறினார்.
