இந்திய நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைந்து வருகிறது சிபிஎம் மூத்த தலைவர் பிருந்தா காரத் குற்றச்சாட்டு

2 Min Read

திருச்சூர், ஜூன் 16– இந்திய நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைந்து வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் கவலை தெரிவித்துள்ளார்.

பிருந்தா காரத் பேசும்போது கூறியதாவது:

கேரள மாநிலம் திருச்சூரில் நடந்த இ.எம்.எஸ். நினைவு கருத்த ரங்கத்தில் ‘மக்களவை மற்றும் சட்டமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம்’ என்ற தலைப்பில், ”மாநில சட்டமன்றங்களில் பெண் களின் பிரதிநிதித்துவம் குறைந்து வரு வதில் மிகவும் ஏமாற்றமளிக்கும் புள்ளிவிவரம் கேரளத்திலிருந்து வருகிறது.

இது தேசிய சராசரியை விடக் குறைவானது ஆகும். கேரள சட்டமன்றத்தில் பெண்கள் வெறும் 7.6 சதவிகிதம் மட்டுமே உள்ளனர்.

தமிழ்நாடு, அசாமில் இது எட்டு சதவிகிதமாக உள்ளது. புதுச்சேரி சட்டமன்றத்தில் ஒரு பெண் கூட இல்லை. இதுதான் இன்றைய இந்தியாவில் பெண்கள் அதிகார மளித்தலின் மாதிரி. பெண்கள் இடஒதுக்கீட்டை சீர்குலைத்தது பாஜக தான் – இந்தியாவில் பெண் களுக்கான இட ஒதுக்கீட்டை எப் போதும் சீர் குலைத்தது பாஜக தான்.

1996இல் தேசிய முன்னணி அரசாங்கத்தின் போது மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அறிமுகப்படுத் தப்பட்டதிலிருந்து, பாஜக அந்த மசோதாவை வலுவிழக்கச் செய்யும் நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, வேறு பல கோரிக்கைகளை நிறை வேற்றுவதற்கான ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டது.

தொகுதி எல்லை நிர்ணயம் மற்றும் மக்கள் தொகைக் கணக் கெடுப்பை முடிந்தவரை தாமதப் படுத்துவதற்காக, மகளிர் இட ஒதுக்கீடு அதனுடன் இணைக்கப் பட்டது. மக்கள் தொகைக் கணக் கெடுப்பு முடிந்து, தொகுதி எல்லை நிர்ணயம் செய்யப்படும் நேரத்தில், 2029 தேர்தல்கள் முடிந்துவிடும். கடந்த மக்கள் தொகைக் கணக் கெடுப்பின் அடிப்படையில் தொகுதி எல்லை நிர்ணயம் செய்ய லாம் என்று பாஜக இப்போது கூறு கிறது.

அது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதும் சாத்தியமற்றது மாகும். கடந்த கூட்டத் தொடரில் எதிர்க் கட்சிகளால் ஒருமனதாகத் தோற்கடிக்கப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீண்டும் அறிமுகப்படுத்தப் படலாம். சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பிறகான அரசியல் சூழலில் இந்த மசோதாவை நிறைவேற்றி விட முடியும் என்று அவர்கள் நம்பு கிறார்கள்.

திரிணாமூல் காங்கிரசின் வீழ்ச்சியும், இந்தியா கூட்டணி க்கும் திமுகவுக்கும் இடையிலான பிளவும் தங்களுக்குப் பயனளிக் கும் என்று பாஜகவினர் நம்புகிறார்கள்.” இவ்வாறு பிருந்தா காரத் கூறி யுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *