அய்டிஅய் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பக் கால அவகாசம் நீட்டிப்பு!

சென்னை, ஜூன் 16– தமிழ்நாட்டில் அய்டிஅய் (ITI) மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேர விரும்புவோருக்கான விண்ணப்பக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ள இந்த நீட்டிப்பு குறித்த விவரங்கள் பின்வருமாறு:

அய்டிஅய் சேர்க்கை
புதிய கடைசி தேதி: ஜூன் 30

விவரம்: அய்டிஅய் நேரடி சேர்க்கைக்கான (Direct Admission) கால அவகாசம் கடந்த 13ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், தற்போது வரும் ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கால்நடை மருத்துவப் படிப்புகள் (TANUVAS Admission)புதிய கடைசி தேதி: ஜூன் 23

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் (TANUVAS) இளநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நாளை (ஜூன் 17) முடிவடைய இருந்த நிலையில், தற்போது அது ஜூன் 23ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுவரை விண்ணப்பிக்காத தகுதியுள்ள மாணவர்கள் இந்த கூடுதல் கால அவகாசத்தைப் பயன்படுத்தி இணைய வழி மூலம் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *