சென்னை, ஜூன் 16–– தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர் களுக்கான பொது இட மாறுதல் கலந்தாய்வு வரும் ஜூன் மாதத்தில் இணையதளம் வாயிலாக நடத்தப்படும் என்று தமிழ் நாடு அரசு அரசாணை வெளியிட் டுள்ளது.
பொது இடமாறுதல்
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட் டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:
கடந்த ஆண்டு கலந் தாய்வு: 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான அரசு கல்லூரி ஆசிரியர்களுக் கான பொது இடமாறுதல் கலந்தாய்வு, கடந்த ஜனவரி மாதம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
ஜூன் மாதத்தில் கலந்தாய்வு: இதனைத் தொடர்ந்து, நடப்பு 2026-2027ஆம் கல்வியாண்டுக் கான பொது இடமாறுதல் கலந்தாய்வை வரும் ஜூன் மாதத்தில் நடத்த அரசு முடிவு செய்துள்ளது.
இந்தக் கலந்தாய்வை முறையான நெறிமுறை களைப் பின்பற்றி, முற்றிலும் வெளிப்படைத் தன்மையுடன் இணைய தளம் வாயிலாக நடத்து வதற்கு கல்லூரிக் கல்வி ஆணையருக்கு அனுமதி வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளம் கலந்தாய்வு குறித்த விரிவான வழிகாட்டு தல்கள் மற்றும் தேதிகள் விரைவில் கல்லூரிக் கல்வி இயக்ககத்தால் தனியாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
