கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 15.6.2026

2 Min Read

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

* கீழ்ப்படியும் பணியாளரை போல அமெரிக்காவின் உத்தரவுகளுக்கு மோடி அடி பணிகிறார்: ராகுல் காந்தி கண்டனம்! ஓமன் துறைமுகத்துக்கு அருகே எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க போர் விமானம் தாக்கியதில் 3 இந்திய மாலுமிகள் பலியாகினர். வெளிநாட்டுச் சக்திகள் நம் மக்களை கொல்கின்றன; அரசோ அவர்கள் உத்தரவுக்கு பணிந்து போகிறது என ராகுல் சமூக வலைத்தளத்தில் பதிவு.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி அய்தராபாத்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆர்ப்பாட்டம். சோனம் வாங்சுக் உள்ளிட்ட கல்வியாளர்கள் பங்கேற்பு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* மம்தாவுக்கு கடும் நெருக்கடி; திரிணாமுல் அதிருப்தி எம்.பிக்கள் அறிமுகமே இல்லாத ‘தேசியவாத குடிமக்கள் கட்சி’யில் இணைந்தனர்: மக்களவைத் தலைவரிடம் கடிதம் கொடுத்தனர்

தி இந்து:

* பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இருந்து விலகுகிறோம்: ஜி.கே.வாசன் அறிவிப்பு. கட்சியை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தும் நோக்கில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து (NDA) வெளியேற தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) [TMC(M)] முடிவு செய்தது.

தி டெலிகிராப்:

* திருவனந்தபுரத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் 3 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்றது மன்னிக்க முடியாத குற்றம் என்றும், அவர்கள் கேரள மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன் கண்டிப்பு.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* ‘நேஷனலிஸ்ட் சிட்டிசன்ஸ் பார்ட்டி’யுடன் இணையத் திட்டமிடும் அதிருப்தி டி.எம்.சி. எம்.பி.க்களை தகுதி நீக்கம் செய்யக் கபில் சிபல் வலியுறுத்தல். “திரிணாமுல் காங்கிரஸ்  அதிருப்தி எம்.பி.க்கள், ‘நேஷனலிஸ்ட் சிட்டிசன்ஸ் பார்ட்டி’யுடன் (NCP) இணையவுள்ளனர். இந்திய ஜனநாயகம் ஒரு ‘அபத்தமான நாடகமாக’ மாறிவிட்டது. இது ஒரு கேலிக்கூத்து! டி.எம்.சி. சட்டமன்றக் குழுவைச் சேர்ந்த அதிருப்தியாளர்கள் ஒரு அரசியல் கட்சியுடன் இணைய முடியாது; திரிணாமுல் காங்கிரஸ் விரும்பினால் மட்டுமே அது சாத்தியமாகும்!” என கபில் சிபல் விளக்கம்.

– குடந்தை கருணா

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *