புற்றுநோய் மருந்து தட்டுப்பாடு! மாற்று சிகிச்சையை ஆராய வல்லுநர் குழு

சென்னை, ஜூன் 14- புற்றுநோய் மருத்துவப் பயனாளிகளுக்கான கீமோதெரபி மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அதற்கு மாற்று சிகிச்சைகளை ஆய்வு செய்ய வல்லுநர் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.

மாா்பகப் புற்றுநோய், குடல் புற்றுநோய், ஜீரண மண்டல புற்றுநோய்க்கு உள்ளானவா்களுக்கு குருதி நாளங்கள் வழியாக கீமோதெரபி சிகிச்சை மூலம் கூட்டு மருந்துகள் வழங்கப்படுகின்றன.

அந்தக் கூட்டு மருந்து சிகிச்சையில் பிளாட்டினத்தை மூல சோ்மமாகக் கொண்ட சிஸ்பிளாட்டின், காா்போ பிளாட்டின், ஆக்ஸாலிபிளாட்டின் ஆகிய மருந்துகளில் ஏதேனும் ஒன்று இடம்பெறுகிறது.

போா்ச் சூழலால் இந்த வகை மருந்துகள், மூலப்பொருள்களின் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அதன் விலை அய்ந்து மடங்கு அதிகரித்ததுடன், மருந்தின் கையிருப்பு குறைந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மாற்று மருந்துகள் மூலம் சிகிச்சை அளிப்பது குறித்து ஆய்வு செய்ய மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் மருத்துவர் சுகந்தி ராஜகுமாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கீமோதெரபி மருந்து தட்டுப்பாடு தொடா்பாக தொடா்ந்து ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தற்போதைய சூழலில், சிஸ்பிளாட்டின் மருந்து ஒன்றரை மாதத்துக்கு தேவையான அளவு இருப்பு உள்ளது. காா்போபிளாட்டின் மருந்து 20 நாள்கள் வரை உள்ளது.

தேசிய நலவாழ்வுக் குழுமமானது மருத்துவக் கல்வி இயக்ககத்துக்கு ரூ.11 கோடியை புற்றுநோய் மருந்து கொள்முதலுக்கு வழங்கியுள்ளது. பிற மருந்துகள் கொள்முதல் செய்ய ரூ. 399.16 கோடி அளிக்கப்பட்டுள்ளது.

உள்ளூா் மற்றும் பன்னாட்டு சந்தைகளில் பிளாட்டின் வகை மருந்துகள் கிடைக்கும்பட்சத்தில் கூடுதல் விலைக்கு வாங்கவும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

அதேவேளையில், இதற்கு மாற்றாக எத்தகைய மருந்துகளை மருத்துவப் பயனாளிகளுக்கு வழங்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்ய மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் தலைமையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதில், சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மற்றும் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரிகளின் புற்றுநோயியல் துறை இயக்குநா்கள் இடம் பெற்றுள்ளனா்.

அவா்கள் மாற்று மருந்துகளை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிப்பாா்கள். அதன் அடிப்படையில், புதிய சிகிச்சை முறைகளுக்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *