அரசுப் பள்ளிகளில் உடற்கல்விப் பாடவேளை கட்டாயம்

சென்னை, ஜூன் 14- தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் உடற்கல்விப் பாடவேளை கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறைச் செயலர் தலைமையில் கடந்த மே 27-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை உடற்கல்வி பாடவேளை கட்டாயம் இடம்பெற வேண்டும். அந்த பாடவேளைகளில் மாணவர்களுக்கு உடற்பயிற்சி வகுப்புகள் நடத்த அறிவுறுத்த வேண்டும். அனைத்து உடற்கல்வி இயக்குநர்களும், ஆசிரியர்களும் உடற்கல்வி பாடவேளையில் அதற்கான பாடத் திட்டத்தை பயன்படுத்தி வகுப்புகள் எடுக்க வேண்டும். விளையாட்டில் விருப்பம் உள்ள மாணவர்களுக்கு, பள்ளி நேரம் முடிந்த பிறகு, சிறப்பு விளையாட்டுக்கான பயிற்சி வகுப்புகளை எடுக்க வேண்டும்  என்று அதில் கூறப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *