டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* அமெரிக்க தொழிலதிபர் எலன் மஸ்க்கின் சொத்து மதிப்பு ஒரு டிரில்லியன் டாலராக, அதாவது ரூபாய் ஒரு லட்சம் கோடியாக உயர்ந்தது.
* வாக்கு திருட்டை தொடர்ந்து சீட்டு திருட்டில் ஈடுபடும் பாஜக: வட கொரியா போல் ஜனநாயகம் அழிக்கப்படுகிறது என தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் குற்றச்சாட்டு.
* மாநிலங்களவை தேர்தலில் வேட்புமனு நிராகரிப்பதற்கு எதிர்ப்பு காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
*கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் தனி இட ஒதுக்கீடு இல்லை; திரிணாமுல் காங்கிரஸ் கிளர்ச்சியாளர்கள் சட்டரீதியான தடையை சந்திக்க நேரிடும்: மக்களவை முன்னாள் பொதுச்செயலாளர் பி.டி.டி.ஆச்சாரி கருத்து. அரசியல் சாசன விதிகளின் கீழ் தங்கள் கட்சி முறைப்படி மற்றொரு கட்சியுடன் இணைந்தால் மட்டுமே, கட்சி விலகல் தடுப்புச் சட்டம் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பாதுகாக்கும்; மூன்றில் இரண்டு பெரும்பான்மை கூட பாதுகாப்பிற்கு தகுதி பெறாது என்கிறார் ஆச்சாரி.
தி இந்து:
* சமஸ்கிருதத் திணிப்பு: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6 & 9 வகுப்புகளுக்கு சமஸ்கிருதத்தை மூன்றாம் மொழியாக கற்கும் மாணவர்கள் குறைந்தபட்சம் ஒரு பிரிவை பராமரிக்க வேண்டும். தற்போது நாடு முழுவதும் 1,288 செயல்பாட்டு கே.வி. பள்ளிகள் உள்ளன,
* ஒடிசாவில் உள்ள அனைத்து அரசு நிறுவனங்களிலும் மழலையர் பள்ளி (கேஜி) முதல் முதுகலை (பிஜி) வரையிலான கல்வி முற்றிலும் இலவசம் ஆக்கப்படும் என்று முதலமைச்சர் மோகன் சரண் மாஜி அறிவிப்பு.
தி டெலிகிராப்:
* இணையவழி படிப்புகள் மூலம் ‘கிரெடிட்’ (கல்வி மதிப்பெண்) பெற அனுமதிக்கும் டில்லி பல்கலைக் கழகத்தின் நடவடிக்கைக்கு ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு. இத்தகைய நடவடிக்கைகள் வகுப்பறை கற்பித்தல் முறையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்தே தங்கள் ஆட்சேபனை இருப்பதாக அச்சங்கம் கருத்து.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* பிரிந்து சென்ற அணியை ஆதரிக்கும் அந்த 19 “துரோகிகளும்” “பதவி விலகி, பாஜக சார்பில் போட்டியிட வேண்டும்” என்று திரிணாமுல் காங்கிரஸ் (TMC) தலைவரான மஹுவா மொய்த்ரா காட்டம். எம்.பி.க்களின் எண்ணிக்கை முக்கியமல்ல; அசல் அரசியல் கட்சியின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் வேறொரு கட்சியுடன் இணைய வேண்டும்.” என எச்சரிக்கை.
– குடந்தை கருணா
