அருப்புக்கோட்டை, ஜூன் 13– அருப்புக்கோட்டையில், மதுரைச் சாலை – எஸ்.பி.கே. பள்ளிச் சாலை சந்திப்பில், 09.06.2026 அன்று மாலை 6 மணியளவில், அருப்புக்கோட்டை பெரியார் மாளிகை 61 ஆம் ஆண்டு விழா, முத்தமிழறிஞர் கலைஞரின் 103 ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திராவிடர் எழுச்சி நாள் பரப்புரைக் கூட்டம் தொடங்கியது.
மாவட்டச் செயலாளர் விடுதலை தி.ஆதவன் தலைமையில், விருதுநகர் ஆசிரியர் கா.நல்லதம்பி, மாவடட ப.க. தலைவரும் சாத்தூர் நகர் மன்றத் துணைத் தலைவருமான பா.அசோக் ஆகியோர் முன்னிலையில், நகரச் செயலாளர் பா.இராசேந்திரன் வரவேற்புரையாற்றினார்.
விடுதலைச் சிறுத்தைகள் நகரச் செயலாளர் கா.குருசாமி, தமிழ்ப் புலிகள் இயக்க மாநில துணைப் பொதுச் செயலாளர் மு.கலைவேந்தன், சி.பி.எம். பொறுப்பாளர் தோழர் காத்த முத்து, சி.பி.அய். மூத்த தோழர் ஆ.இளங்கோ, தி.மு.க. நகரச் செயலாளர் ஏ.கே.மணி, பா.அசோக், விருதுநகர் கா.நல்லதம்பி ஆகியோரது உரைக்குப் பின் தலைமைக் கழகப் பேச்சாளர் பொன்.அருண்குமார் திராவிடர் எழுச்சி நாள் குறித்து சிறப்புரையாற்றினார்.
மாவட்டக் காப்பாளர் அ.தங்கசாமி, திமுக. தலைமைச் செயற்குழு உறுப்பினர் சுப்பாராஜ், நகர் மன்றத் துணைத் தலைவரும் மாவட்ட தி.மு.க. நெசவாளரணிப் பொறுப்பாளருமான பழனிச்சாமி, தி.மு.க. கிளைச் செயலாளர் மா.இராஜசேகரன், தமிழ்ப் புலிகள் இயக்க மாவட்டச் செயலாளர் முனியசாமி, ஆற்றலரசு, சி.பி.எம். நகரச் செயலாளர் பரமதயாளன், ஒன்றிய கழக தலைவர் மா.முத்துக்குமார், செயலாளர் இரா.முத்தையா, ப.க. செயலாளர் பூ.பத்மநாதன், நகரத் தலைவர் மு.முனியசாமி, அமைப்பாளர் க.சுப்பிரமணி, பொ.கணேசன் மற்றும் தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
இறுதியாக பொதுக்குழு உறுப்பினர் இரா.அழகர் நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது.
