கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 12.6.2026 டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கான காரணங்களை ஆழமாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, தேவையான நடவடிக்கைகள் மற்றும் அமைப்பு ரீதியான முடிவுகளை எடுக்க திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.

* மீனாட்சி நடராஜன் வேட்பு மனு நிராகரிப்பு: ம.பியில், காங்கிரஸ் சார்பில் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட மீனாட்சி நடராஜன் மாநிலங்களவைக்கு தாக்கல் செய்த மனு,  அய்தராபாத் நீதிமன்றத்தில் அவர் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்கு பற்றி வேட்பு மனுவில் குறிப்பிடப்படாததால் நிராகரிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது காங்கிரஸ். வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

* ஒன்றிய அரசிடம் முந்தைய திமுக அரசு எடுத்து வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில், தற்போதைய முதலமைச்சர் ஜோசப் விஜய்யும் கருத்து: நீட் தேர்வை தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது; ஒன்றிய அரசுடன் ஆக்கப்பூர்வ ஒத்துழைப்பு: நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் உரை

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ம.பி.யில் மாநிலங்களவை வேட்புமனு நிராகரிப்புக்கு எதிரான மீனாட்சி நடராஜனின் மனுவை இன்று விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ‘அமைப்பு சீர்கெட்டுள்ளது, கரப்பான் பூச்சிகள் அதைச் சரி செய்யும்’: புனேயில் நாடு தழுவிய போராட்டத்தை தொடங்கியது சி.ஜே.பி.; ‘தேர்வுக்கான தேர்தல் அறிக்கை’ வெளியீடு.

* தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்க மாட்டோம், மாநில உரிமைகளில் சமரசம் இல்லை: திராவிடக் கட்சியான திமுக ஒருபோதும் பாஜகவுடன் கூட்டணி வைக்காது என்று திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசா தெரிவித்தார்.

தி இந்து:

* வீட்டுப் பராமரிப்பில் ஈடுபடும் பெண்கள் ‘தேசத்தை உருவாக்குபவர்கள்’; அவர்களின் பணிக்கு மாதத்திற்கு குறைந்தபட்சம் ₹30,000 மதிப்புள்ளது: உச்ச நீதிமன்றம். எதிர்காலத்தில், குடும்பத் தலைவியின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, ‘வீட்டுப் பெண்’ என்ற சொல்லுக்குப் பதிலாக ‘தேசத்தை உருவாக்குபவர்’ என்ற சொல் பயன்படுத்தப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். பெண்களுக்கு அங்கீகாரம் அளிக்க செல்ல வேண்டிய தூரம் இன்னும் வெகுவாக உள்ளது’ என்று  உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கரோல், என்.கே. சிங் தெரிவித்தனர்.

* மேற்கு வங்கத்தில் ரிதப்ரதாவை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்த பேரவைத் தலைவரின் நடவடிக்கை, உயர்நீதிமன்றம் கேள்வி: நீதிபதி கிருஷ்ணா ராவ் அரசிடம், “எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்ட நபர் எந்த ஒரு அரசியல் கட்சியையும் சார்ந்தவர் அல்ல; அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர். ஒரு அரசியல் கட்சியின் ஒப்புதல் இல்லாமல், ஒரு அதிருப்தி தலைவர் பேரவைத் தலைவரால் எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரிக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

*   மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கான ‘பட்டியல் ஜாதி’ (SC) அந்தஸ்து குறித்த குழுவின் அறிக்கை தயார்: மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு ‘பட்டியல் ஜாதி’ அந்தஸ்து வழங்குவது தொடர்பான விவகாரத்தை ஆய்வு செய்து வந்த நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் (ஓய்வு பெற்ற) தலைமையிலான ஆணையம் தனது ஆய்வை முடித்து, ஏறக்குறைய நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அதனிடம் ஒப்படைக்கப்பட்ட பணிக்கான அறிக்கையைத் தயார் செய்து விட்டதாக தகவல்.

தி டெலிகிராப்:

* தேசிய தேர்வு முகமையை (என்.டி.ஏ) கலைக்க வேண்டும்’ என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. மய்யப்படுத்தப்பட்ட தேர்வுகள் பொறுப்புக்கூறலையும் கல்வியின் தரத்தையும் பலவீனப்படுத்துவதாகக் குற்றம் சாட்டும் ஆசிரியர் மற்றும் மாணவர் அமைப்புகள், பல்கலைக்கழகங்களின் தலைமையிலான மாணவர் சேர்க்கை முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* 170 மக்களவைத் தொகுதிகளுக்கு ‘குறிப்பிட்ட இலக்கு சார்ந்த’ தொகுதி மறுவரையறை முறையை மேற்கொள்ளுமாறு பிரதமர் மோடியிடம் பொருளாதார ஆலோசனைக் குழு (EAC-PM) பரிந்துரைத்துள்ளது. இதன் விளைவாக, தென்னிந்திய மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது: தெலங்கானாவில் 17-லிருந்து 26-ஆகவும், ஆந்திராவில் 25-லிருந்து 38-ஆகவும், கர்நாடகாவில் 28-லிருந்து 42-ஆகவும், தமிழ்நாட்டில் 39-லிருந்து 59-ஆகவும், கேரளாவில் 20-லிருந்து 30-ஆகவும் தொகுதிகளின் எண்ணிக்கை உயரும்.

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *