கொட்டாரம், ஜூன் 12- குமரி மாவட்ட கழக சார்பாக முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கொட்டாரம் சந்திப்பில் நடைபெற்றது கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தலைமை தாங்கி உரையாற்றினார்.
பொதுக்குழு உறுப்பினர் மு. இராஜசேகர் வரவேற்புரை யாற்றினார் திராவிட முன்னேற்றக் கழக ஒன்றியச் செயலாளர் பா. பாபு வாழ்த்துரை வழங்கினார் கழக பொதுக்குழு உறுப்பினர் மா.மணி முன்னிலை வகித்தார் கழக சொற்பொழிவாளர் பொன் அருண்குமார் திராவிடர் இயக்கத்தினுடைய தொண்டுகள், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடைய சமூக நீதிப் பணிளையும், முத்தமிழறிஞர் கலைஞரின் சாதனைகள் பெரியாரிய பெரும்பணிகளை விரிவாகப் பேசி சிறப்புரையாற்றினார்.
கழகத் தோழர்கள் மு.பால் மணி, சு.இந்திரா மணி தி.மு.கழக பொறுப்பாளர்கள் பாலசுப் பிரமணியம், ஞானசேகர் வினோத், ஆறுமுகம், ஜானி, தேவகி, கங்காதரன் மற்றும் ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர் மாவட்ட கழக துணைச் செயலாளர் எஸ். அலெக்சாண்டர் நன்றி கூறினார்.
கொட்டும் மழையையும் பொருட் படுத்தாமல் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு கூட்டத்திற்கு ஆதரவு வழங்கினார்.
