குற்றாலத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை எழுச்சியுடன் நடத்திட முடிவு தென்காசி மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்

3 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

கீழப்பாவூர், ஜூன் 5- ஜூன் 25,26,27,28, நான்கு நாட்கள் குற்றாலத்தில் நடைபெற உள்ள 47 -ஆம் ஆண்டு பெரியாரியல் பயிற்சிப் பட்டறை எழுச்சியுடன் நடத்திட தென்காசி மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

02.06.2026  செவ்வாய்க் கிழமை மாலை 05.30 மணியளவில் கீழப்பாவூர் பெரியார் திடலில் மிகுந்த எழுச்சியுடன் நடைப்பெற்றது

தென்காசி மாவட்ட காப்பாளர் சி.டேவிட் செல்லதுரை. நிகழ்விற்கு தலைமை வகித்து பேசினார்.

மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. குணசேகரன், கூட்டத்தின் நோக் கங்கள் விளக்கி  பேசும் போது, நமது குடும்பத் தலைவர் ஆசிரியர் உழைப்பை சுட்டிக்காட்டியும். இன்றைய சூழ்நிலையில் அரசியல் மாற்றத்திற்கு பிறகும் நமது இயக்கத்தினுடைய செயல்பாடுகளையும் ஆசிரியர் சுற்றுப் பயணங்களையும் சுட்டிக்காட்டியும் குற்றாலத்தில் நடைபெற உள்ள பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை மிகுந்த உற்சாகத்துடன் நடத்த வேண்டும் தென்காசி மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியரை அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டும். ஒன்றிணைந்து  வெற்றிகரமாகவும் நடத்தி முடிக்க வேண்டும் என்று பேசினார்.

மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் இறுதியாக சிறப்புரை யாற்றினார்

“திராவிடர் கழகத் தோழர்கள் எந்தவித பிரதி பலனும் எதிர்பாராமல் தொண்டாற்றக் கூடியவர்கள் கருப்புச்சட்டை தோழர்களின் தியாக வாழ்க்கைக்கு தன்னலமற்ற உழைப்பிற்கு எனது சல்யூட் என முதலமைச்சராக இருந்த தளபதி மு.க.ஸ்டாலின் சல்யூட் அடித்து கருப்புச் சட்டை தோழர்களுக்கு ஒரு அங்கீகாரத்தையும் நமது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் உழைப்பிற்கு மிகப்பெரிய மரியாதையும் செலுத்தினார்.

நமக்கெல்லாம்  உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் பேசினார்.

வாக்குப்பதிவு முடிந்த அன்றைய தினமே பெங்களூரு புறப்பட்டார். மறுதினம் ஒகேனக்கல் பயிற்சிப் பட்டறை அதன் பிறகு தொடர்ச்சியாக கள்ளக்குறிச்சி, லால்குடி, திருவாரூர், பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டது இடையில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் ஒன்று கடந்த வாரம் 13 மாவட்டங்களை உள்ளடக்கி ஆசிரியர் தலைமையில் திருவாரூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் இப்படி தொடர்ச்சியாக ஆசிரியர் அவர்கள் இந்த இயக்கத்தை இயக்கிக் கொண்டே வருகிறார்.

அந்த வகையில் நாம் வருகின்ற 25, 26, 27, 28 ஆகிய நான்கு நாட்கள் குற்றாலத்தில் நடைபெறக்கூடிய பெரியாரின் பயிற்சிப் பட்டறையை மிகுந்த எழுச்சியுடன் நடத்த வேண்டும் அதற்கு இங்குள்ள அத்தனை பேரின் ஒத்துழைப்பும் மிக மிக அவசியம். அதை போல் தலைமைக் கழகம் அறிவித்த கலைஞர் பிறந்தநாள் கூட்டத்தினை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும் என்று பேசினார்.

இளைஞரணி பொறுப்பாளர் சு.இனியவன் கடவுள் மறுப்பு கூறினார்.

விருதுநகர் மாவட்டக் கழகத் தலைவர் இல.திருப்பதி, மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி, பகுத்தறிவாளர் கழக துணை தலைவர் கே.டி.சி.குருசாமி. தென்காசி மாவட்டக் கழகத் தலைவர் த.வீரன், மாவட்டச் செயலாளர் கை.சண்முகம், பொதுக்குழு உறுப்பினர் அய்.இராமச்சந்திரன், ஆகி யோர் முன்னிலை வகித்து கருத்துகளை தெரிவித்தனர்.

ஆலங்குளம் கிளைத் தலைவர் பெரியார் குமார். பெரியார் பெருந் தொண்டர் இராமசாமி, பொன்.விஜய் ஆனந்த, பாவூர்சத்திரம் இல.அன்பழகன், ஆகியோர் கலந்துகொண்டு கருத்துகளை தெரிவித்து சிறப்பித்தனர்.

தீர்மானங்கள்

உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழ் விடுதலைக்கு 92ஆம் ஆண்டு பிறந்த நாள் வாழ்த்துகளை இக்கூட்டம் தெரிவித்துக்கொள்கிறது.

வணக்கத்திற்குரிய தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, அவர்கள் கட்டளைப்படி இல்லங்கள் தோறும் விடுதலை பரப்பும் பணியில் சந்தா சேர்த்து அளிப்பது என தீர்மானிக் கப்படுகிறது.

குற்றாலத்தில் ஜூன் 25,26,27,28, ஆகிய நான்கு நாட்கள் நடைபெறவுள்ள 47 ஆம் ஆண்டு பெரியாரியல் பயிற்சிப் பட்டறையினை மிகச் சிறப்பாக நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

குற்றாலத்திற்கு வருகைத் தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, அவர்களுக்கு தென்காசி மாவட்ட கழகத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது என தீர்மானிக்கப்படுகிறது.

திராவிடர் எழுச்சி நாள் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் 103 ஆவது பிறந்த நாள் விழா கூட்டத்தை 05-06-2026 அன்று மாலை பாவூர்சத்திரம் பேருந்து நிலையம் அருகில் நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

புதிய பொறுப்பாளர்கள்

தென்காசி மாவட்ட மாணவர் கழகத் தலைவர்  சு.இனியன், திராவிட மாணவர் கழகச் செயலாளர் செங்கதிர் வள்ளுவன். இறுதியாக பாவூர்சத்திரம் கிளைக் கழக பொறுப்பாளர் பி.சிவா நன்றி கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *