ஜப்பானில் உள்ள பல பெரியார் பற்றாளர்கள், முற்போக்கு சிந்தனை யாளர்களில் முக்கியமான வரும், பல விருதுகளைப் பெற்ற இலக்கிய ஆய்வு நுண்ணறிவாளரும், திராவிடர் கொள்கைப் பற்றாளரும் ஆன தோழர் கமலக்கண்ணன்அவர்களுக்கு இன்று 50ஆம் ஆண்டு (பொன்விழா) பிறந்தநாள் ஆகும்.
அதையொட்டி அவருக்கு கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொலைபேசியில் வாழ்த்துக் களைத் தெரிவித்தார். கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்களும் வாழ்த்து தெரிவித்தார்.
வரும் அக்டோபரில் ஜப்பான்– டோக்கியோ நகரில் நடைபெறவிருக்கும் பெரியார் சுயமரியாதை மனிதநேய மாநாட்டின் ஏற்பட்டாளர்களில் இவர் முதன்மையராவார் என்பது குறிப்பிடத்தக்கது.
