தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (24.3.2023) தலைமைச் செயலகத்தில், பின்னணிப் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள மந்தைவெளி மேற்கு வட்டச் சாலைக்கு “டி.எம்.சௌந்தரராஜன் சாலை” எனப் புதிய பெயர் சூட்டப்பட்ட சாலையின் பெயர் பலகையை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் டி.எம்.சவுந்தரராஜன் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.