பெண்கள் பாதுகாப்புக்காக அறிவிக்கப்பட்ட ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ திட்டம் நிறுத்தம் ஏன்? த.வெ.க. அரசுக்கு கனிமொழி எம்.பி. கேள்வி!

2 Min Read

சென்னை, மே 30 தமிழ் நாட்டில் சட்டம்-ஒழுங்கு பிரச் சினைகள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டு, பெண்கள் பாதுகாப்புக்காக அறிவிக்கப்பட்ட ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை’ திட்டம் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது ஏன் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

‘சிங்கப் பெண் அதிரடித் திட்டம்’

தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, பெண்கள் பாது காப்பினை உறுதி செய்யும் வகையில் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இப்படையில் இடம்பெறும் பெண் காவலர் மற்றும் பெண் துணை ஆய்வாளர்களுக்கென தனிச் சிறப்பு சீருடைகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. இத்திட்டத்தின் தொடக்க விழா முதலில் கடந்த 27-ஆம் தேதி எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவிருந்தது. ஆனால், முதலமைச்சர் டில்லி சென்றதால் விழா தள்ளிவைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து,  28.5.2026 அன்று இத்திட்டத்தை முதல மைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைப்பதாக இருந்த நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றன. எனினும், கடைசி நேரத்தில் இந்தத் தொடக்க விழா திடீரென ரத்து செய்யப்பட்டது.

எக்ஸ் தளத்தில்
கனிமொழி எம்.பி. காட்டம்

இத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதை சுட்டிக்காட்டி, திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி தனது எக்ஸ்  சமூக வலைதளப் பக்கத்தில் தவெக அரசை விமர்சித்துப் பதிவிட்டுள்ளார். அதில் “கடலூரில் இளம்பெண் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட செய்தி, தூத்துக்குடியில் நண்பர் களுடன் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப் பட்ட செய்தி என தமிழ் நாட்டில் அடுத்தடுத்து வேதனை அளிக்கும் குற்றச்சம்ப வங்கள் நிகழ்ந்துள்ளன.”

சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு: அதிகரித்து வரும் சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகளின் தீவி ரத்தை உணர்ந்து தவெக அரசு எப்போது செயல்படப் போகிறது?

திட்டம் நிறுத்தம் ஏன்?: மகளிர் பாதுகாப்புக்காக தொடங்கப்படும் என்று அறிவித்திருந்த ‘சிறப்பு அதிரடிப்படை’ திட்டத்தை தற் போது நிறுத்திவைத்துள்ளது ஏன்?

அரசின் நடவடிக்கை என்ன?: தமிழ்நாட்டில் தொடர்ந்து அரங் கேறி வரும் இத்தகைய குற்றச் சம் பவங்களைத் தடுக்க இந்த அரசு என்ன செய்யப் போகிறது? என கடுமையாக குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *