இத்தாலியில் தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்தக் கோரி மாபெரும் போராட்டம்! பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

2 Min Read

ரோம், மே 28- அடிப்படை ஊதியத்தை உயர்த்தக்கோரி தொழி லாளர்கள், பொது மக்கள் திரண்டு ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்தியுள்ளனர். இதில் 15 ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் கலந்துகொண்டனர்.

அரசாங்கம் மக்களின் அத்தியா வசியத் தேவைகளைக் கவனிப்பதை விட்டுவிட்டு, தேவையில்லாமல் ராணு வத்திற்கும் போருக்கும் அதிகப் பணம் செலவழிக்கக் கூடாது, விலைவாசி உயர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

விண்ணைமுட்டும் விலைவாசி

இத்தாலியில் தொழிலாளர்கள் வாங்கும் தற்போதைய ஊதியத்தை வைத்துக்கொண்டு குடும்பம் நடத்துவது மிகக் கடினமாக மாறியுள் ளது. இத்தாலியில் 1.1 கோடி மக்கள் வறுமையின் விளிம்பில் வாழ்கிறார்கள்.

அதில் 50 சதவீதத்துக்கும் அதிக மான மக்களால் ஒரு ரூபாய் கூட சேமிக்க முடிவதில்லை. “திடீரென்று மருத்துவம் அல்லது வேறு ஏதேனும் ஒரு அவசரச் செலவு வந்தால் அதனை தம்மால் சமாளிக்க முடியாது.

அந்த அளவிற்கு எங்கள் வருமானம் சரிந்து பொருளாதார நெருக்கடியில் உள்ளோம்” என 4 இல் ஒருவர் கூறுகிறார். மின்சாரக் கட்டணம், பெட்ரோல், உணவு என எல்லாவற்றின் விலையும் ஏறிக்கொண்டே போகிறது, ஆனால் ஊதியம் மட்டும் உயர வில்லை எனவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இத்தாலி அரசு பெரிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு சலுகைகள் என்ற பெயரில் மக்களின் வரிப்பணத்தை அள்ளிக் கொடுக்கிறது.

ஆனால், அந்த நிறுவனங்களோ லாபத்தைச் சுருட்டிக் கொண்டு, திடீரென ஆலைகளை மூடிவிட்டு தொழி லாளர்களை வேலை நீக்கம் செய்து விடுகின்றன. இதனால் நாட்டின் தொழில்துறை முற்றிலும் அழியும் நிலையில் உள்ளது.

போரும், பொருளாதாரச் சீரழிவும்!

நாட்டின் பொருளாதார வளர்ச்சி நன்றாக இருப்பதாகக் கூறிக்கொண்டு, ராணுவத்திற்கும் போருக்காகவும் அரசு அதிக முதலீடு செய்து வருகிறது. மக்க ளுக்கு அடிப்படை ஊதியத்தை அதிக ரிக்காமல் அவர்களிடம் வசூல் செய்யப் படும் வரிகள் மூலம் ஆயுதங்களை வாங்கிக் குவித்து, மக்களின் வயிற்றில் அடிக்கிறது” என்று தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.

கோரிக்கைகள்

தொழிலாளர்களுக்கு ஒரு மணி நேரத்திற்குக் குறைந்தபட்சம் 12 யூரோக்கள் (1,100 ரூபாய்) ஊதியமாக வழங்க வேண்டும். நாட்டில் உள்ள பெரும் செல்வந்தர்கள் மீது கூடுதல் வரி விதிக்க வேண்டும். காசாவில் நடக்கும் கொடூரங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இஸ்ரேலுட னான உறவைத் துண்டிக்க வேண்டும். அமெரிக்காவின் நெருக்கடியின் கீழ் இருக்கும் கியூபா நாட்டிற்கு ஆதர வளிக்க வேண்டும் என தொழிற்சங் கங்கள் கோரிக்கை வைத்துள்ளன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *