பெண் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிக்கு வாழ்நாள் முழுவதும் சிறை வைகோ வலியுறுத்தல்

2 Min Read

சென்னை, மே 25- பெண் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மாநில அரசு வாழ்நாள் சிறைச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ 24.5.2026 அன்று தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பெண் பாலியல் வன்கொடுமை கொலைகள் அடுத்தடுத்து எல்லாருடைய ஆட்சியிலும் நடந்து கொண்டுதான் இருக் கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டு மென்றால், குற்றம் சாட்டப்பட்டு கூண்டில் நிறுத்தப்படும் அந்த கயவர்களுக்கு நீதி மன்றங்கள், பிணை விடுதலை கொடுக்கவே கூடாது. சில நிகழ்வுகளைப் பார்க்கும் போது, பிணை விடுதலையில் வந்தவர்கள்தான் மீண்டும் பெண்களை வன்கொடுமை செய்து கொலை செய்கிறார்கள். ஆகவே, நீதி மன்றங்கள் பிணை விடுதலை வழங்கவே கூடாது. இதுபோன்று பாலியல் வன்கொடுமை செய்து, சிறுமிகள் உட்பட பெண் களை படுபயங்கரமாக நாசமாக்கி கொலை செய்கிற கொடியவர்களுக்கு, ‘வாழ்நாள் முழு வதும் சிறை’ என்றுதான் தண்டனை இருக்க வேண்டும். ஆயுள் தண்டனை என்று கூறி பத்து ஆண்டுகளில் விடுதலை செய்வதெல் லாம் இருக்கக் கூடாது. எனவே, வாழ்நாள் முழுவதும் சிறை என்ற சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும். அந்தச் சட்டத்தை ஒன்றிய அரசு அங்கீகரிக்க வேண்டும்” என்றார்.

சுங்கச்சாவடிகளை ஒட்டியுள்ள
உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் உயர்வு

தமிழ்நாடு

சென்னை, மே 25 – தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் 77 இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் சென்னை – கன்னி யாகுமரி, திருச்சி – சேலம், சேலம் – கோவை உள்ளிட்ட முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் 60 சுங்கச்சாவடி கள் அமைந்துள்ளன. சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் 5 சதவீதம் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, கடந்த ஏப்.1-ஆம் தேதி முதல் 60 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் 60 சுங்கச்சாவடிகளை சுற்றியுள்ள உள்ளூர் சிறிய ரக வாகனங்களுக்கான மாதாந்திர கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையை சுற்றி அதிக சுங்கச்சாவடிகள் உள்ளன. சுங்கச்சாவடிகள் அமைந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சலுகை அடிப்படையில் மாதாந்திர பாஸ் வழங்கப்படுகின்றன. 20 கி.மீ. சுற்றளவுக்கு உட்பட்டு வசிக்கும் மக்களுக்கு சிறிய ரக வாகனங் களுக்கான மாதாந்திர கட்டணம் ரூ.340-இல் இருந்து ரூ.350 ஆக உயர்ந்துள்ளது. ஒரு சில சுங்கச்சாவடிகளில் ரூ.15 உயர்த்தப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *