விருத்தாசலம், மே 23- திமுக கூட்டணியில் தொடர்கிறோம் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உறுதிபடத் தெரிவித்தார்.
விருத்தாசலம் தொகுதியில் போட்டி யிட்டு வெற்றிபெற்ற பிரேமலதா, வாக்களித்த வாக்காளர்களுக்கு கடந்த 3 நாள்களாக தொகுதிக் குட்பட்ட பகுதிகளில் நன்றி தெரிவித்தும், முக்கிய அலுவலகங்களை ஆய்வு செய்தும் வருகிறார்.
அப்போது செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது:
விருத்தாசலத்தில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறேன். இனிவரும் காலங்களில் தொகுதியில் தங்கியிருந்து, அவர்களது கோரிக்கைகளை நிறை வேற்ற பாடுபடுவேன். சென்னையில் பெரும் பலான இடங்களில் மின் வெட்டு இருப்பதாக அறிகிறேன்.
விஜய் தலைமையிலான புதிய அரசுக்கு அவகாசம் கொடுப்போம். பொறுத் திருந்து பார்க்கலாம். இவ்வாறு கூறினார்.
திமுக கூட்டணியில் இருந்து விசிக, அய்யுஎம்எல் போன்ற கூட்டணிக் கட்சிகள் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்து, அமைச்சரவையிலும் இடம் பிடித்திருப்பது தொடர்பாக கேட்டபோது, “அவர்களது விருப்பம். அதை விமர்சிப்பதில் அர்த்தமில்லை.
எங்களைப் பொறுத்த வரை திமுக கூட்டணியில் தொடர்கிறோம்” என்றார்.
தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. தொடர்கிறது! பிரேமலதா மீண்டும் உறுதி
Leave a Comment
