இலங்கை சிறையில் உள்ள 12 தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்கக் கோரி மீனவக் குடும்பத்தினர் சாலை மறியல்!

ராமேஸ்வரம், மே 23- இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 12 தமிழ்நாடு மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி, பாம்பனில் மீனவக் குடும் பத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் இணைந்து நடத்திய தீவிர சாலை மறியல் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சாலை மறியல்

கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற கபில் ரோச்சர், ஜான்சன், ஆண்டனி உட்பட 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

அவர்கள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, தற்போது வெளிச்சுரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மீனவர்கள் சிறையில டைக்கப்பட்டு 88 நாட்களைக் கடந்தும் அவர்கள் விடுதலைக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மீனவ குடும்பத்தினர் கடும் வேதனையில் ஆழ்ந் துள்ளனர்.

போராட்டம்

ஒன்றிய, மாநில அரசுகள் தலையிட்டு மீனவர்களை உடனடியாக மீட்க வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பத்தினர் பாம்பன் பேருந்து நிறுத்தம் அருகே நேற்று (22.5.2026) திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இலங்கை சிறையில் வாடும் 12 மீனவர்களையும் உடனே தாய்நாடு திருப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப் பட்டன.

இந்தப் போராட்டத் தில் சிறையில் உள்ள மீனவர்களின் மனைவிகள், குழந்தைகள் திரளாகப் பங்கேற்று கதறி அழுதது பார்ப்போர் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

ஆதரவு

இப்போராட்டத்திற்கு பாம்பன் விசைப்படகு, நாட்டுப்படகு மீனவ சங்கங்கள், ராமேசுவரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்கத் தலைவர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் நேரில் வந்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். இதனால் ராமேசுவரம் – ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உறுதிமொழி

சம்பவ இடத்திற்கு வந்த ஏஎஸ்பி மீரா, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, “அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்” என உறுதியளித்ததை அடுத்து போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப் பட்டது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *